தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Virat Kohli: சச்சின், டிராவிட், தோனி வரிசையில் சாதனை புரிய காத்திருக்கும் கோலி!

Virat Kohli: சச்சின், டிராவிட், தோனி வரிசையில் சாதனை புரிய காத்திருக்கும் கோலி!

Manigandan K T HT Tamil

Jul 19, 2023, 03:11 PM IST

google News
Ind vs WI: 12 வருடங்களுக்கு முன் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்டில் அறிமுகமானார் விராட் கோலி. (Hindustan Times)
Ind vs WI: 12 வருடங்களுக்கு முன் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்டில் அறிமுகமானார் விராட் கோலி.

Ind vs WI: 12 வருடங்களுக்கு முன் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்டில் அறிமுகமானார் விராட் கோலி.

இந்தியாவுக்காக 500வது கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடவுள்ளார். இதன்மூலம், சச்சின், எம்.தோனி, டிராவிட் ஆகியோரின் வரிசையில் இடம்பிடிக்கிறார் கோலி.

நாளை தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிதான் கோலிக்கு ஒட்டுமொத்தமாக 500வது கிரிக்கெட் போட்டியாகும். இந்திய பேட்ஸ்மேன் கோலிக்கு இதுவொரு மிகப் பெரிய மைல்கல் ஆகும்.

12 வருடங்களுக்கு முன் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்டில் அறிமுகமானார் விராட் கோலி.

டொமினிகாவில் நடந்த முதல் டெஸ்டில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி, இரண்டு இன்னிங்ஸிலும் குறைந்தது 345 ரன்கள் எடுத்தால் தனது டெஸ்ட் சராசரியான 50 ஐ மீண்டும் எட்ட முடியும்.

விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் இதுவரை:

போட்டிகள் - 499

இன்னிங்ஸ் - 558

ரன்கள் - 25461

சராசரி - 53.48

அதிகபட்ச ஸ்கோர் - 254*

அரைசதம் : 131;

சதம் : 75

இரட்டை சதம் : 7

டெஸ்ட்டில் விராட் கோலி:

போட்டிகள் - 110

இன்னிங்ஸ் - 186

ரன்கள் - 8555

சராசரி - 48.88

அதிகபட்ச ஸ்கோர் - 254*

அரை சதம் : 29

சதம்: 28

இரட்டை சதம்: 7

டி20 வரலாற்றில் அதிக ரன்கள் (4008) எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி. ஒருநாள் வரலாற்றில் அதிவேகமாக 8000, 9000, 1000, 11000, 12000 ரன்களை கடந்தவர்.

இதுவரை 500-க்கும் அதிகமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் (664 போட்டிகள்), மகிலா ஜெயவர்த்தனே (652), குமார் சங்ககாரா (594), ஜெயசூர்யா (586), ரிக்கி பாண்டிங் (560), எம்.தோனி (538), அஃப்ரிடி (524), காலிஸ் (519), ராகுல் டிராவிட் (509).

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடட்டில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி