Rohit Sharma: 'இஷான் கிஷனுக்கு என்ன பர்த் டே கிஃப்ட் கொடுத்தீங்க'-ரோகித் பதில் என்ன தெரியுமா?
Jul 19, 2023, 04:52 PM IST
Ishan Kishan: அப்போது செய்தியாளர் ஒருவர் ரோகித் சர்மாவிடம், இஷான் கிஷனுக்கு என்ன பிறந்த நாள் பரிசு கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடட்டில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இஷான் கிஷனுக்கு நேற்று பிறந்த நாள். அதையொட்டி செய்தியாளர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ரோகித் சர்மாவிடம், இஷான் கிஷனுக்கு என்ன பிறந்த நாள் பரிசு கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அருகில் இருந்த இஷானை பார்த்து, "என்ன பிறந்த நாள் பரிசு வேண்டும் பிரதர். உங்களிடம் தான் எல்லாமே இருக்கே" என சிரித்துக் கொண்டே கேட்டார். பதிலுக்கு இஷானும் சிரிந்து கொண்டு இருந்தார்.
பின்னர், "2வது டெஸ்டில் சதம் விளாசுங்கள் இஷான் கிஷன். அதுதான் நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் பர்த்டே கிஃப்டாக இருக்கும். இதை நாம் டீமிடமும் கேட்க வேண்டும்" என்றார்.
முதல் டெஸ்டில் ரோகித் சர்மா, டெஸ்டில் 10வது சதத்தை பதிவு செய்தார். அறிமுக ஆட்டத்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி காட்டி, 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷனுக்கும் இதுவே முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும். அவர் களமிறங்கி 1 ரன் பதிவு செய்ததும் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இஷான் கிஷன், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித்துடன் இணைந்து விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்