HBD Sunil Gavaskar: இந்திய கிரிக்கெட்டின் 'லிட்டில் மாஸ்டர்' பிறந்த தினம் இன்று
Jul 11, 2023, 05:27 PM IST
வேகப்பந்து வீச்சுக்கு எதிரான அவரது நுட்பமான பேட்டிங்கிற்காக கவாஸ்கர் பாராட்டப்பட்டார்.
சுனில் கவாஸ்கர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர். தற்போது வர்ணனையாளராகவும், பிரபல ஸ்போர்ட்ஸ் இதழில் கிரிக்கெட் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.
அவருக்கு இன்று பிறந்த நாள் (ஜூலை 10). அவரது அருமை, பெருமைகள் குறித்து பார்ப்போம்.
வேகப்பந்து வீச்சுக்கு எதிரான அவரது நுட்பமான பேட்டிங்கிற்காக கவாஸ்கர் பாராட்டப்பட்டார்.
குறிப்பாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 65.45 என்ற அதிக சராசரியுடன், வேகப்பந்து வீச்சை விளாசினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய விஷயமாக கருதப்படுகிறது.
இந்திய அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டிருக்கிறார். இவரது தலைமையிலான இந்திய அணி 1984 ஆசியக் கோப்பையையும், 1985 ஆம் ஆண்டில் பென்சன் & ஹெட்ஜஸ் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.
அதே நேரத்தில், கவாஸ்கரும் கபில் தேவும் பல முறை கேப்டன்ஷிப்பை மாறி மாறி கவனித்து வந்தனர்.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
அதற்கு 6 மாதங்களுக்கு முன்பு தான் கபில் கேப்டனாக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் கேப்டனாக இருந்தார்.
கவாஸ்கருக்கு அர்ஜுனா விருது மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர் 2009 ஆம் ஆண்டில் ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.
2012 ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு முன்னாள் வீரருக்கு வழங்கக்கூடிய மிக உயர்ந்த விருதான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை இவருக்கு வழங்கி கவுரவித்தது.
மும்பையில் ஒரு நடுத்தர வர்க்க மராத்தி குடும்பத்தில் பிறந்து செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார் சுனில் கவாஸ்கர்.
1971ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுகமானார் சுனில் கவாஸ்கர்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1974ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அறிமுகமானார்.
டெஸ்டில் மொத்தம் 125 ஆட்டங்களில் விளையாடி 10,122 ரன்களை குவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
அவர் மொத்தம் 34 சதங்களையும் 45 அரை சதங்களையும் டெஸ்டில் விளாசியிருக்கிறார்.
ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை 108 ஆட்டங்களில் விளையாடி, 3,092 ரன்களை குவித்துள்ளார்.
1 சதம், 27 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
சுனில் கவாஸ்கருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
டாபிக்ஸ்