தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Vs Bangladesh: வங்கதேசத்தை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

India vs Bangladesh: வங்கதேசத்தை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Karthikeyan S HT Tamil

Oct 09, 2022, 11:43 AM IST

google News
ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியில் இளம் வீராங்கனை ஷஃபாலி வா்மாவின் அதிரடியால் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

வங்கதேசத்தில் ஆசிய கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசத்துடன் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 55, ஸ்மிருதி மந்தனா 47, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்கள் சேர்த்தனர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி அடைந்தது.

அதிகபட்சமாக நிகர் சுல்தானா 36, ஃபர்கானா ஹோக் 30, முர்ஷிதா கதுன் 21 ரன்கள் சேர்த்தனர். தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 55 ரன்கள் குவித்தும், 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷஃபாலி வர்மா ஆட்டநாயகியாக தேர்வு பெற்றாா். 7 அணிகள் இடம்பெற்றுள்ள இந்த தொடரில் 5 ஆட்டங்களில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி