தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Mixed Doubles Squash Championship: மலேசியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்! தீபிகா பல்லீகல் - சந்து ஜோடி அபாரம்

Asian Mixed Doubles Squash Championship: மலேசியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்! தீபிகா பல்லீகல் - சந்து ஜோடி அபாரம்

Jun 30, 2023, 05:10 PM IST

google News
சீனாவில் நடைபெற்று வந்த ஆசிய கலவை இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
சீனாவில் நடைபெற்று வந்த ஆசிய கலவை இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சீனாவில் நடைபெற்று வந்த ஆசிய கலவை இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஆசிய கலவை ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள ஹூவாங்ஸோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின.

இந்திய அணியில் ஹரிந்தர்பால் சிங் சந்து, தீபிகா பல்லீகல் ஜோடியும், மலேசியா அணியில் ரேச்சல் அர்னால்ட், இவான் யுவான் ஜோடியும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 11-10, 11-8 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

இதையடுத்து முதல் முறையாக நடைபெறும் ஆசிய கலவை ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது. அதேபோல் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய மற்றொரு இந்திய ஜோடியான அனாஹத் சிங் - அபேய் சிங் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.

கடந்த 1998இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து ஸ்குவாஷ் விளையாட்டும் ஒவ்வொரு ஆசிய போட்டிகளிலும் தவறாமல் இடம்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு சீனாவில் வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோப்ர 8 வரை சீனாவின் ஹூவாங்ஸோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்த ஸ்குவாஷ் விளையாட்டும் இடம்பெறுகிறது.

ஆசிய விளையாட்டுக்கு முன்னதாக ஆசிய ஸ்குவாஷ் கலவை சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் ஜூன் 26 முதல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 நாடுகளில் இருந்து 21 அணிகள் பங்கேற்றன.

இதையடுத்து இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அணி தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்காத நட்சத்திர வீராங்கனையான தீபிகா பல்லீகல், தற்போது ஆசிய கலவை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி