தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi 2nd Test Preview: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்டில் ஒரு ஸ்பெஷல் இருக்கு..அது என்ன தெரியுமா?

Ind vs WI 2nd Test Preview: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்டில் ஒரு ஸ்பெஷல் இருக்கு..அது என்ன தெரியுமா?

Manigandan K T HT Tamil

Jul 20, 2023, 10:28 PM IST

google News
முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்டில் வென்றால் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றும்.
முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்டில் வென்றால் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றும்.

முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்டில் வென்றால் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றும்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி இன்று டிரினிடட்டில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதுவது இது 100-வது முறையாகும். இதுவே இந்தப் போட்டியின் ஸ்பெஷல் ஆகும். 100வது டெஸ்டில் விளையாடுவது சிறப்பு வாய்ந்தது என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி 1948/49 காலகட்டத்தில் நடைபெற்றது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் நடந்த இந்த போட்டி டிராவில் முடிந்தது.

அறிமுகப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. இளம் தொடக்க ஆட்டக்காரர் தனது டெஸ்ட் அறிமுகத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அவர் சதம் பதிவு செய்து அசத்தினார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் சதம் அடித்ததால் அவருக்கும் இந்த போட்டி மகிழ்ச்சியான போட்டியாக அமைந்தது.

ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்தால், ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும்.

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சேர்க்கப்படாமல் இருந்த அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் போட்டியில் அசத்தினார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டொமினிகாவில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கும் குறைவாகவே ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸை 150 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு சரணடையச் செய்தது.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வெறும் 5 பவுலர்கள் மட்டுமே தலா 1 விக்கெட்டை எடுக்க முடிந்தது.

இந்தியாவின் மேஜிக் இரண்டாவது டெஸ்டிலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமும் கூட.

முன்னதாக, முதல் டெஸ்டில் 3-வது வரிசையில் பேட்டிங் செய்து 2 மற்றும் 11 ரன்களை மட்டுமே முறையே 2 இன்னிங்ஸ்களிலும் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ரேமன் ரெய்ஃபர் இரண்டாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

அதேநேரம், கெவின் சின்கிளெயர் என்ற இளம் வீரருக்கு வாய்ப்பு அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி