தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi 2nd Test: தரமான சம்பவம் காத்திருக்கு.. யஷஸ்வி-ரோகித் நங்கூர ஆட்டம்!

Ind vs WI 2nd Test: தரமான சம்பவம் காத்திருக்கு.. யஷஸ்வி-ரோகித் நங்கூர ஆட்டம்!

Manigandan K T HT Tamil

Jul 20, 2023, 10:38 PM IST

google News
Rohit Sharma: வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. (BCCI Twitter)
Rohit Sharma: வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Rohit Sharma: வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்டில் வென்றால் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றும். 2வது டெஸ்ட் போட்டி இன்று டிரினிடட்டில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று யஷஸ்வி, ரோகித் சர்மா கலக்கி வருகின்றனர்.

உணவு இடைவேளையில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 26 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்துள்ளது.

இருவரும் அரை சதம் பதிவு செய்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓபனிங் பேட்ஸ்மேனாக 2000 ரன்களை பதிவு செய்தார் கேப்டன் ரோகித் சர்மா.

ஆட்டம் தொடர்ந்து விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

முன்னதாக, முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. இளம் தொடக்க ஆட்டக்காரர் தனது டெஸ்ட் அறிமுகத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அவர் சதம் பதிவு செய்து அசத்தினார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் சதம் அடித்ததால் அவருக்கும் அந்த போட்டி மகிழ்ச்சியான போட்டியாக அமைந்தது.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர்.

இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 100வது டெஸ்ட் போட்டியாகும். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி 1948/49 காலகட்டத்தில் நடைபெற்றது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் நடந்த இந்த போட்டி டிராவில் முடிந்தது.

டொமினிகாவில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கும் குறைவாகவே ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸை 150 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு சரணடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி