CWC 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எழுந்த புதிய சிக்கல்! பின்னணி காரணம்
Jul 26, 2023, 01:18 PM IST
உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான தேதியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து உலகமே எதிர்நோக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோப் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை முன்னிட்டு தற்போதே அங்கு ஓட்டல் ரூம்கள் அனைத்தும் புக்காகியுள்ளன. அத்துடன், ஓட்டல் ரூம்களின் விலை வழக்கத்தை விட நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது.
இதையடுத்து தற்போது அந்த நாளில் போட்டி நடைபெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திர கொண்டாட்டம் முதல் நாளாக உள்ளது. இதனால் அன்றைய நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் உருவாகும் என்பதால், இதை கருத்தில் கொண்டு வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பிசிசிஐ பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை கருத்தில் எடுத்துக்கொண்ட பிசிசிஐ, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை வேறு தேதிக்கு மாற்றுவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த போட்டி குறித்த புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அக்டோப்ர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்