IND vs WI 1st ODI: ஆதிக்கத்தை தொடருமா இந்தியா? மீண்டும் புத்துயிர் பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்
Jul 27, 2023, 07:02 AM IST
உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றில் தோல்வி அடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கும் போட்டியாக இன்றைய ஆட்டம் அமைகிறது. எவ்வித நெருக்கடியும் இல்லாத நிலையில் அணியை மீண்டும் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி பார்போடாஸில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு இந்த போட்டி தொங்குகிறது.
இந்தியாவை பொறுவத்தவரை இந்த போட்டியானது வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கான ஒத்திகை போன்ற அமைந்துள்ளது. இன்னும் இரண்டு மாத காலம் இருக்கும் நிலையில், வெற்றி தோல்வியை கடந்த உலகக் கோப்பை தொடருக்கான சரியான காம்பினேஷனை சரியாக அமைப்பதற்கான வாய்ப்பாக உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை முதல் முறையாக உலகக் கோப்பை விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது. எனவே அணியின் மீண்டும் கட்டமைக்க வேண்டிய மிக பெரிய பணி மட்டுமே அவர்களின் ஒற்றை குறிக்கோளாக இருக்கும். இதனால் அணியை புத்துயிர் பெற வைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என தெரிகிறது.
இதன் மூலம் 2027 உலகக் கோப்பை தொடருக்கு தற்போது இருந்தே தயாராகும் முயற்சியில் ஈடுபடும் என தெரிகிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் என இரு அணிகளும் தங்களது கடைசி ஒரு நாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
போட்டி நடைபெறும் கெனசிங்டன் ஓவல் பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளமாக அமைந்துள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு நன்கு செயல்பட்டு வருகிறார்கள். எனவே பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்கள் இன்றையை போட்டியில் கவனம் ஈர்ப்பார்கள் என்று நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்