BCCI: உலகக் கோப்பைக்கு முன் ஆஸி.,-ஐ எதிர்கொள்கிறது இந்திய கிரிக்கெட் அணி!-முழு விவரம் உள்ளே
Jul 25, 2023, 09:33 PM IST
IND vs AUS: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
2023 உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும், இங்கிலாந்தை 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) 2023-24 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு சீசனுக்கான இடங்களை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) 2023-24 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு சீசனுக்கான இடங்களை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இந்திய அணி இந்த சீசனில் 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகள் கொண்ட மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது.
பி.சி.சி.ஐ வெளியிட்ட செய்தி அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை சாம்பியனான இந்தியா அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பையை நடத்துகிறது.
ஒருநாள் தொடர் மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறும். 50 ஓவர் உலகக் கோப்பை முடிந்த பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் டிசம்பர் 3ம் தேதி ஐதராபாத்தில் முடிவடைகிறது.
இந்தியா ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதன் மூலம், 2024 ஆண்டைத் தொடங்குகிறது. இரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மொகாலி மற்றும் இந்தூரிலும், கடைசி போட்டி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை இதே மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
2024 ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலா ஆகிய நகரங்களை வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களாக பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடங்குவதற்கு முன்பு வீரர்களுக்கு மூன்று வார இடைவெளி இருக்கும். இந்திய கிரிக்கெட் வாரியமும் இந்த வாரம் ஊடக உரிமை டெண்டரை அறிவிக்கும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்