HT Sports Special: சைலண்ட் ஹீரோ! இந்தியா 90s அணியில் முக்கிய இடது கை ஸ்பின்னர்! வெங்கடபதி ராஜு நிகழ்த்திய அற்புதங்கள்
Jul 09, 2023, 07:00 AM IST
ஹீரோவாகவும் இல்லாமல், ஜீரோவாகவும் இல்லாமல் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முக்கிய இடது கை ஸ்பின்னராகவும், சைலண்ட் ஹீரோவாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தியவர் வெங்கடபதி ராஜு.
இந்திய கிரிக்கெட் அணியில் 1990 காலகட்டத்தில் முக்கிய இடது கை ஸ்பின்னராக இருந்தவர் வெங்கடபதி ராஜு. இந்தியா அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1990 முதல் 2001 வரை விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடும் விதமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்லோ லெப்ட் ஆர்ம் ஆர்தோடக்ஸ் பவுலராக இருந்து வந்த வெங்கடபதி ராஜு, உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் விளைவாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
பவுலரான இவர் முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரம் தாக்குபிடித்து 31 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் இலங்கைக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட கொடரில் வெறும் 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.இதுவே சர்வதேச கிரிக்கெட்டில் இவர் பெற்ற ஒரேயொரு ஆட்ட நாயகன் விருதாகும்.
ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை சிறந்த ஸ்பின் பவுலராக ஜொலித்த இவர், மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தும் பவுலராகவும் இருந்தார். அதே சமயம் மிகவும் ஸ்லோ பவுலராக இருக்கும் இவரது ஓவர்களில் அடிந்த விழுந்த போட்டிகளும் ஏராளம் உள்ளன.
1992, 1996 என இரண்டு உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றார். இந்திய அணி கேப்டனாக இருந்த அசாருதின் இவருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கொல்கத்தாவில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற போட்டிதான் இவர் விளையாடிய கடைசி போட்டியாகும்.
தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்த ராஜு, 2004இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை பெற்றார். 2007இல் முதல் டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய வென்றபோது தேர்வுக்குழு தென்மண்டல தலைவராக வெங்கடபதி ராஜு இருந்தார். தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் துணை தலைவராக இருந்து வரும் ராஜு இந்தியாவுக்காக 28 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 93 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அதேபோல் 53 ஒரு நாள் போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 177 போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 124 ஆட்டங்களில் 152 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
தோனி கேப்டன்சியில் ஜடேஜாவுக்கு முன்னர் இடது கை ஸ்பின்னராக அணியில் இடம்பிடித்த பிரக்யான் ஓஜா, வெட்கடபதி ராஜுவால் பெற்ற இன்ஸ்பிரேஷன் மூலமாகவே இந்திய அணிக்காக விளையாடும் ஆர்வம் ஏற்பட்டது என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
90ஸ் இந்திய கிரிக்கெட்டில் சோலோ இடது கை ஸ்பின்னராக ஜொலித்த வெங்கடபதி ராஜு இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்