தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Sharath Kamal: டேபிள் டென்னிஸ் விளையாட்டின் சூரன்! 40 வயதில் கேல் ரத்னா விருது பெற்ற வீரர்

HBD Sharath Kamal: டேபிள் டென்னிஸ் விளையாட்டின் சூரன்! 40 வயதில் கேல் ரத்னா விருது பெற்ற வீரர்

Jul 12, 2023, 07:30 AM IST

google News
காமன் வெல்த் விளையாட்டுகளில் மட்டும் 13 பதக்கங்களை வென்றிருக்கும் நட்சத்திர வீரரான சரத் கமல், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்களிலும் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டில் 40 வயதை கடந்து விளையாடும் வீரராக இருந்து வரும் இவர் கேல் ரத்னா விருதையும் வெற்றியாளராக உள்ளார்.

சென்னையில் பிறந்தவரான சரத் கமல் சர்வதேச டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரராக உள்ளார். 10 முறை சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கும் இவர் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதை ஆகியவற்றுக்கு சொந் தக்காரராக உள்ளார். 

சர்வதேச ஆடவர் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் தரவரிசையில் தற்போது 39வது இடத்தில் இருந்து வருகிறார். 4 வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு அவருக்கு அறிமுகமாகி உள்ளது. அவரது தந்தை மற்றும் உறவினரும் இணைந்து அவருக்கு இந்த விளையாட்டில் பால பாடத்தை பயிற்று வித்துள்ளனர்.

காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளின் நாயகன் என்று அழைக்கப்படும் சரத் கமல், 2006ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளில் முதல் முறையாக தங்கம் வென்றார். அப்போது முதல் தொடங்கிய இவரது பதக்க வேட்டை காமன் வெல்த் போட்டிகளில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என என 13 பதங்கங்களை எட்டியுள்ளது.

அதேபோல் ஆசிய விளையாட்டு போட்டிளிலும் 2 முறை வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல் யுஎஸ் ஓபன் டேபிள் டென்னிஸ், எகிப்து ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர்களை வென்று முதல் இந்தியன் என்ற சாதனை புரிந்துள்ளார்.

ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பதக்கம் வென்றவராக இருந்து வரும் சரத் கமல், 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக், 2008 பிய்ஜிங் ஒலிம்பிக்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக் தொடர்களில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரராக உள்ளார். ஆனால் சரத் கமல் இதுவரை ஒலிம்பிக் பதக்கம் வென்றதில்லை.

நான்கு வயதில் தந்தை மற்றும் உறவினர் மூலம் டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி பற்றிய அறிமுகம் சரத் கமலுக்கு கிடைத்தது. இவரது தந்தையும், உறவினரும் தேசிய அளவில் விளையாட்டு வீரர்களாக இருந்ததுடன், பயிற்சியாளராகவும் இருந்தனர். இதனால் சரத் கமலை, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் நன்கு தேர்ந்தவராக மாற்றினர். தனது 15வது வயதில் தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரராக மாறிய சரத் கமல், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.

இப்போது டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மூத்த வீரராக இருந்து வரும் சரத் கமல், இளைஞர்களுக்கு சவால் விடும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக இருந்து வருகிறார்.

தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் இவர், ஐரோப்பா நாட்டின் பல்வேறஉ டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சூரனாக இருந்து வரும் சரத் கமல் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி