தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Jasprit Bumrah: 'I Am Coming'-பும்ரா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

Jasprit Bumrah: 'I am coming'-பும்ரா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

Manigandan K T HT Tamil

Jul 18, 2023, 03:01 PM IST

google News
காயம் காரணமாக 2022 செப்டம்பரில் இருந்து பும்ரா விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை. (@CricCrazyJohns)
காயம் காரணமாக 2022 செப்டம்பரில் இருந்து பும்ரா விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை.

காயம் காரணமாக 2022 செப்டம்பரில் இருந்து பும்ரா விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, காயம் காரணமாக நீண்ட பிரேக் எடுத்திருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் விளையாடவில்லை. தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோ உள்ளது. பின்னணியில் Diddy - Dirty Money-இன் ஆல்பம் பாடலான கம்மிங் ஹோம் ஒலிக்கிறது.

பும்ராவின் லேட்டஸ் அப்டேட் மூலம், எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் அவர் உடற்தகுதியுடன் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக 2022 செப்டம்பரில் இருந்து பும்ரா விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் பும்ராவுக்கு நியூசிலாந்தில் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பும்ரா தனது தனித்துவமான பந்துவீச்சால் மீண்டும் களத்தில் இறங்குவதைக் காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தொடர் காயம் காரணமாக அவரால் அணியில் இடம் முடியவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதுகில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் அணிக்கு திரும்ப முயற்சித்துள்ளார்.

ஆரம்பத்தில், காயம் தீவிரமாகத் தெரியவில்லை, அதனால் அவர் செப்டம்பரில் இந்தியாவின் டி 20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார், மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டி 20 போட்டிகளிலும் விளையாடினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடவில்லை. அவர் ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்பட்டார். இது அவரது முதுகில் காயம் இருப்பதைக் காட்டியது. அவர் என்.சி.ஏவுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்கேன் காயம் தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்தியது. இதனால் அவர் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறினார்.

பும்ரா டிசம்பர் மாதத்தில் பந்துவீசத் தொடங்கினார். ஆனால், அவருக்கு முதுகு வலி தொடர்ந்து நீடித்தது. அதைத்த தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தொடர், பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டி ஆகியவற்றில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023) இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) அணிக்காக விளையாடியபோது ஏற்பட்ட தொடை காயத்திலிருந்து மீண்டு வரும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், பயிற்சிக்குப் பிறகு ஓய்வெடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மே 9 ஆம் தேதி இங்கிலாந்தில் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) குணமடையத் தொடங்கினார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி