தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  China Masters: இந்தோனேஷியாவுக்கு எதிராக வெற்றி! அரையிறுதிக்கு தகுதி பெற்ற சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி

China Masters: இந்தோனேஷியாவுக்கு எதிராக வெற்றி! அரையிறுதிக்கு தகுதி பெற்ற சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி

Nov 24, 2023, 05:26 PM IST

google News
சீனா மாஸ்டர்ஸ் போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது நேர் செட் வெற்றியுடன் இந்தியாவின் நட்சத்திர ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சீனாவில் நடைபெற்று வரும் சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் இந்தோஷனியாவின் டேனியல் மார்ட்டின் மற்றும் லியோ ரோலி கார்னாண்டோ ஜோடியை எதிர்கொண்டது இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி. இந்த போட்டியானது 46 நிமிடங்கள் நீடித்தன.

ஆட்டத்தின் முதல் சுற்றை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ஜோடி எளிதாக வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 14-14 என புள்ளிகள் சமநிலையில் இருந்தன. அப்போது இந்திய ஜோடி அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் சுற்றை தன் வசமாக்கியது.

இதன் பின்னர் இரண்டாவது செட்டில், முதல் சுற்றில் பெரிய புள்ளி வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் கிடைத்த தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினர். இதனால் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தின. மறுமுனையில் இந்தோனேஷியா ஜோடியும் சவால் விடுக்கும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் இந்தியா 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது. அத்துடன் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக நேர் செட்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அரையிறுதியில் சீன ஜோடி ஹீ ஜி டிங், ரென் ஜியாங் யு ஜோடியை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த தொடரில் ஜப்பான் ஜோடி அகிரா கோகா, டைய்சி சாய்டோவை 21-15, 21-16 என்ற செட் கணக்கில் தனது முதல் போட்டியில் வென்றது.

சீன மாஸ்ட்ர்ஸ் 2023, பிடபிள்யூஎஃப் சூப்பர் 750 போட்டி முடிவுகள், அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி