INDvsWI 2nd Test: அனல் பறக்கும் களத்தில் கோலி - ஜடேஜா..ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
Jul 21, 2023, 06:42 AM IST
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 288 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டிகள், ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதுகின்றன.
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது டெஸ்ட் வென்றால் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றும். இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டிரினிடட்டில் நடைபெற்றது.
நமது இந்திய நேரப்படி நேற்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இரண்டு பேரும் பொறுப்புடன் களத்தில் விளையாடினர்.
கேப்டன் ரோஹித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் அரை சதம் அடித்து அசத்தினர். முதல் நாள் உணவு இடைவெளி வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் அடித்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 87 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 80 ரன்களும் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 57 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும், கில் 10 ரன்களும், ரஹானே 8 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஜடேஜா மற்றும் வீராட் கோலி ஆட்டமில்லாக்காமல் களத்தில் விளையாடுகின்றனர்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் முடிவில் 84 ஓவரில் இந்தியா நான்கு விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் இறங்கிய ரோகித் சர்மா 2000 ரன்களைப் பதிவு செய்துள்ளார்.
நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 100வது டெஸ்ட் போட்டியாகும். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி 1948/49 காலகட்டத்தில் நடைபெற்றது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் நடந்த இந்த போட்டி டிராவில் முடிந்தது.
டொமினிகாவில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கும் குறைவாகவே ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸை 150 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு சரணடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்