தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Open: இறுதிப்போட்டியில் நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! அரையிறுதியில் வெளியேறிய பிரனாய்

India Open: இறுதிப்போட்டியில் நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! அரையிறுதியில் வெளியேறிய பிரனாய்

Jan 21, 2024, 05:47 PM IST

google News
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: https://twitter.com/httamilnews https://www.facebook.com/HTTamilNews https://www.youtube.com/@httamil Google News: https://bit.ly/3onGqm9 (Mohd Zakir)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: https://twitter.com/httamilnews https://www.facebook.com/HTTamilNews https://www.youtube.com/@httamil Google News: https://bit.ly/3onGqm9

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: https://twitter.com/httamilnews https://www.facebook.com/HTTamilNews https://www.youtube.com/@httamil Google News: https://bit.ly/3onGqm9

இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, உலக அளவில் இரண்டாவது ரேங்கிங்கில் இருந்து வரும் நான்காவது சீட் வீரர்களான மலேசியா ஜோடி ஆரோன் சியா - சோ வூய் யிக் ஆகியோரை எதிர்கொண்டனர்.

இந்தியா ஜோடி இவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக எட்டு முறை தோல்வியை தழுவியிருந்தனர். இதனால் இந்த போட்டியில் கட்டாயம் மலேசியா ஜோடியை, இந்திய ஜோடி வீழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மலேசியா ஜோடிகளுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி 21-18, 21-14 என்ற இரண்டு நேர் செட்களில் வென்றது. கடந்த எட்டு நாள்களுக்கு முன்னர் மலேசியா ஓபன் தொடரில் சாத்விக் - சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது இந்தியா ஓபன் தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் எச்எஸ் பிரனாய், உலகின் நம்பர் 3 வீரரான ஷீ யுகி என்பவரை எதிர்கொண்டார். முதல் முறையாக இந்தியா ஓபன் தொடர் அரையிறுதிக்கு தகுதி பெற்ற எச்எஸ் பிரனாய், சீனா வீரருக்கு எதிராக படுதோல்வியடைந்தார்.

21-15, 21-5 என்று புள்ளிக்கணக்கில் மோசமான தோல்வியை தழுவினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி