தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hockey Rankings: சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஹாக்கி அணி முன்னேற்றம்

Hockey Rankings: சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஹாக்கி அணி முன்னேற்றம்

Manigandan K T HT Tamil

Aug 13, 2023, 05:28 PM IST

google News
2771.35 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும், நெதர்லாந்து (3095.90) முதலிடத்திலும், பெல்ஜியம் (2917.87) இரண்டாவது இடத்திலும் உள்ளன. (PTI)
2771.35 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும், நெதர்லாந்து (3095.90) முதலிடத்திலும், பெல்ஜியம் (2917.87) இரண்டாவது இடத்திலும் உள்ளன.

2771.35 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும், நெதர்லாந்து (3095.90) முதலிடத்திலும், பெல்ஜியம் (2917.87) இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், உலக ஹாக்கி தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2771.35 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும், நெதர்லாந்து (3095.90) முதலிடத்திலும், பெல்ஜியம் (2917.87) இரண்டாவது இடத்திலும் உள்ளன.

புரோ லீக் போட்டிகளில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணி முன்பு நான்காவது இடத்தில் இருந்தது.

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி நான்காவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் 4 மற்றும் 5வது இடத்திலும், ஆஸ்திரேலியா 6வது இடத்திலும் உள்ளன. ஆண்கள் தரவரிசையில் ஸ்பெயின், அர்ஜென்டினா, மலேசியா, நியூசிலாந்து அணிகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

முன்னதாக, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி இந்தியா - மலேசியா இடையே நேற்று நடைபெற்றது. இந்த தொடரில் ஒரேயொரு தோல்வியை மட்டும் மலேசியா பெற்றது. இந்தியா அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றியை பெற்றது.

இந்த தொடரில் வலுவான அணிகளாக திகழ்ந்த இந்தியா - மலேசியா மோதிய இறுதிபோட்டி விறுவிறுப்பு குறையாமல் அமைந்திருந்தது. இரு அணிகளும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தி விளையாடினர்.

இரண்டு அணிகளும் மாறி மாறி கோல்கள் அடிக்க ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் 3-3 என அணிகளின் ஸ்கோர் சமநிலை அடைந்திருந்தது.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் கோல் அடித்த இந்தியா முன்னேறியது. முழு ஆட்ட நேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய வென்றதுடன் கோப்பையும் தட்டி தூக்கியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி