Asia Championships Archery: மூன்று தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்ற இந்தியா
Nov 10, 2023, 03:23 PM IST
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்தியா மூன்று தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டிகல் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் தனி நபர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த இளம் வீராங்கனை ப்ரனீத் கெளர், மற்றொரு இந்திய வீராங்கனையான ஜோதி சுரேகா வென்னத்தை வீழ்த்தி தனது வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இந்த போட்டியில் இருவரும் 145 என்று டை ஆன நிலையில், ஷூட் ஆஃப் இல் 9-8 என்ற புள்ளிக்கணக்கில் ப்ரனீத் கெளர் வென்றார்.
பர்னீத் கெளர், ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி என மூவர் கூட்டு இணைந்த இந்திய அணி, சென் யி ஹ்சுவான், ஹுவாங் ஐ-ஜோ மற்றும் வாங் லு-யுன் ஆகியோர் இடம்பிடித்த சீன தைபே அணியை இறுதி போட்டியில் 234-233 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது.
யு21 உலக சாம்பியன் பிரயான்ஷுடன் இணைந்து, 17 வயது அதிதி சுவாமி கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் தாய்லாந்தின் கனோக்னபஸ் கவ்சோம்புவை 156-151 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு 2018இல் சாம்பியன் பட்டம் வென்ற அபிஷேக் வர்மா, கொரிய குடியரசின் ஜூ ஜேஹூனை 147-146 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஒரே நாளில் 5 பதக்கத்தை வென்ற இந்தியா அணி, மொத்தம் 3 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் அடங்கம்.
இந்தியா வென்றிருக்கும் ஏழு பதக்கங்களில், ஒரேயொரு வெண்கலம் அணி போட்டியில் கிடைத்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்