தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games 2023: முதல் முறையாக ஆசிய போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி - புதிய கேப்டனை நியமித்த பிசிசிஐ

Asian Games 2023: முதல் முறையாக ஆசிய போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி - புதிய கேப்டனை நியமித்த பிசிசிஐ

Jul 15, 2023, 05:07 PM IST

google News
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய டி20 அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய டி20 அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய டி20 அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்த முறை கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இந்த போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அத்துடன் டி20 அணிக்கு புதிய கேப்டனையும் நியமித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் 2010, 2014 ஆகிய இரண்டு முறை மட்டும் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கபபட்டது. இந்த இரண்டு முறையும் இந்தியா பங்கேற்கவில்லை.

அத்துடன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேசம், இலங்கை அணிகள் தலா ஒரு முறை தங்கம் வென்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

இதைத்தொடர்ந்து 9 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், முதல் முறையாக இந்தியா அணி பங்கேற்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு புதிய கேப்டனாக, சிஎஸ்கே ஓபனிங் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த வீரர்கள் அனைவரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியாக இந்திய அணி அமைந்துள்ளது.

இந்திய அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெயஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)

இவர்கள் தவிர யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக உள்ளனர். டி20 போட்டிகளில் புதுமுக வீரர்களாக ஜித்தேஷ் ஷர்மா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி