Asian Kabaddi Championship 2023: சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி!
Jun 30, 2023, 03:59 PM IST
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடரில் இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
தென்கொரியாவில் பூசன் நகரில் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 போட்டி நடைபெற்றன. கடைசியாகக் கபடி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2017 ஆம் ஆண்டு ஈரானில் கோர்க்கன் பகுதியில் நடந்தது. அப்போது நடந்த போட்டியில் இந்தியா அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தென்கொரியாவில் நடைபெற்ற இந்தியா, அரையிறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியும், ஈரான் அணியும் இன்று மோதிக்கொண்டது. முதல் ஐந்து நிமிட ஆட்டத்தில் ஈரான் நாடு முன்னிலை வகித்து வந்தது. இதனை அடுத்துச் சரியாக யூகம் செய்த இந்திய அணி, போட்டியின் பத்தாவது நிமிடத்தில் ஈரான் அணியை ஆல் அவுட் செய்தது.
இந்திய அணியின் கேப்டன் பவன் ஷெராவத் மற்றும் இஸ்லாம் இனாம்தார் இரண்டு பேரும் சிறப்பாக ரைடு சென்றனர். இதன் காரணமாக இந்திய அணிக்குப் புள்ளிகள் அதிகரித்தன. அதேசமயம் விளையாட்டின் போது ஈரான் அணிக்கு சில போனஸ் புள்ளிகளும் கிடைத்தன.
பின்னர் இதனைத் தொடர்ந்து 19-வது நிமிடத்தில் ஈரான் அணியினரை இரண்டாவது முறையாக இந்தியா அணியினர் ஆல் அவுட் செய்தனர். இதன் காரணமாக 23-11 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. இந்தியாவிற்குச் சலைக்காமல் ஈடு கொடுத்த ஈரான் அணியினர் போட்டியின் 29-வது நிமிடத்தில் இந்திய அணியை ஆல் அவுட் செய்தனர்.
கடைசியாக இந்தியா 38-31 என்ற நிலையில் இருந்தது. மிச்சம் இரண்டு நிமிடம் இருந்த நிலையில் இந்திய அணி 42-32 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதுவரை 9 முறை ஆசியக் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. அதில் எட்டு முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது மிகவும் சிறப்புக்குரிய விஷயமாகும்.
இந்தியக் கபடி அணி இதற்கு முன்பு 1980, 1988, 2000, 2001, 2002, 2005 மற்றும் 2017 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு மட்டும் ஈரான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் தற்போது எட்டாவது முறையாக இந்தியக் கபடி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்