தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi: 17 ஆண்டு சாதனை முறியடிப்பு! வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஜெய்ஸ்வாஸ் - ரோஹித் கூட்டணியின் மிரட்டல் இன்னிங்ஸ்

IND vs WI: 17 ஆண்டு சாதனை முறியடிப்பு! வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஜெய்ஸ்வாஸ் - ரோஹித் கூட்டணியின் மிரட்டல் இன்னிங்ஸ்

Jul 14, 2023, 11:09 AM IST

google News
முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் ஷர்மா முந்தைய வீரேந்தர் சேவாக் - வாசிம் ஜாபர் சாதனையை முறியடித்துள்ளது (AP)
முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் ஷர்மா முந்தைய வீரேந்தர் சேவாக் - வாசிம் ஜாபர் சாதனையை முறியடித்துள்ளது

முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் ஷர்மா முந்தைய வீரேந்தர் சேவாக் - வாசிம் ஜாபர் சாதனையை முறியடித்துள்ளது

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதையை நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணியை விட 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் ஷர்மா இணைந்து 229 ரன்கள் எடுத்தனர். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வீரேந்தர் ஷேவாக் - வாசிம் ஜாபர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக எடுத்து 159 ரன்களே சிறந்த பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. இந்த சாதனையை யஷஸ்வி - ரோஹித் ஜோடி முறியடித்துள்ளது. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் முதல் முறையாக 200+ பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்துள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்கள் அந்நிய மண்ணில் சாதனை புரிவது எப்போதுமே ஸ்பெஷல்தான். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் போட்டியில் சதமடித்த 17வது இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார். முன்னதாக, கவாஸ்கர், கோலி ஆகியோர் தங்களது முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில்தான் விளையாடினார்கள். இவர்களை தொடர்ந்து ஜெயஸ்வாலும் வெஸ்ட் இண்டீஸில் தனது அறிமுக போட்டியில் விளையாடி, நிதானமாகவும், பொறுப்புடனும் பேட் செய்தார்.

அத்துடன் ஆசிய மண்ணுக்கு வெளியே முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து மற்றொரு சாதனையும் புரிந்துள்ளார் ஜெய்ஸ்வால். இதற்கு முன்னதாக முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக், தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக ப்ளூம்ஃபோன்டைன் மைதானத்தில் 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் சதமடித்தார். இது சேவாக்கின் முதல் அந்நிய மண் போட்டியாக அமைந்தது. இதையடுத்து 21 ஆண்டுகள் கழித்து அந்நிய மண்ணில் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தனது 10வது சதத்தை அடித்துள்ளார். அத்துடன் அந்நிய மண்ணில் அவர் அடிக்கும் இரண்டாவது சதமாக அமைந்துள்ளது. இவற்றுடன் மற்றொரு அரிய சாதனையும் ரோஹித் படைத்துள்ளார். ரோஹித் ஷர்மா அரை சதம் அடித்தபோது இந்திய ஓபனர்களில் 102 முறைக்கு மேல் 50+ ஸ்கோர் அடித்து கவாஸ்கர், சேவாக் ஆகியோரை முந்தியுள்ளார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் 120+ அரைசதத்துக்கு மேல் அடித்து சச்சின் டென்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி