தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi: ‘மூன்றே நாளில் முடித்து காட்டிய இந்தியா’ இன்னிங்ஸ் தோல்வி பெற்ற வெ.இ.,!

IND vs WI: ‘மூன்றே நாளில் முடித்து காட்டிய இந்தியா’ இன்னிங்ஸ் தோல்வி பெற்ற வெ.இ.,!

Jul 15, 2023, 06:31 PM IST

google News
அற்புதமான சுழல் பந்து வீச்சு மூலம் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரட்டிய அஸ்வின் இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்நிய மண்ணில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்துள்ளார். (AP)
அற்புதமான சுழல் பந்து வீச்சு மூலம் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரட்டிய அஸ்வின் இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்நிய மண்ணில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்துள்ளார்.

அற்புதமான சுழல் பந்து வீச்சு மூலம் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரட்டிய அஸ்வின் இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்நிய மண்ணில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே டோமினிகாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அஸ்வினின் சுழல் மாயாஜாலத்தால் மூன்றே நாள்களில் இந்த போட்டி முடிவடைந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் ஆல்அவுட்டானது. இந்தியா பவுலர்களில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவருக்கு அடுத்தபடியாக சுழலில் மிரட்டிய ஜடேஜாவும் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 271 ரன்கள் முன்னிலை பெற்றது.

அறிமுக போட்டியில் களமிறங்கிய இந்திய இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து சாதனை புரிந்தார். நிதானமாக பேட் செய்த அவர் 387 பந்துகளை எதிர்கொண்டு 171 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இவரைத்தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சதமடித்து 103 ரன்களில் அவுட்டானர். விராட் கோலி அடுத்த அதிகபட்ச ஸ்கோராக 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேக் பிராத்வைட் 9 பவுலர்களை பயன்படுத்தினார்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அஸ்வின் சுழலில் தடுமாறினார்கள். அத்துடன் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அற்புதமாக பந்து வீசிய அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் வீசப்பட்ட 50.3 ஓவர்களில், வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், ஜெயதேவ் உனத்கட் இணைந்து 8 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். மீதமுள்ள ஓவர்களை ஜடேஜா - அஸ்வின் கூட்டணியே வீசியுள்ளனர்.

அஸ்வின் இந்த போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் எட்டாவது முறையாக அவர் 10+ விக்கெட்டுகளை எடுத்திருப்பதுடன், அந்நிய மண்ணில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து 280 ரன்கள் எடுத்து 20 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அஸ்வின் இந்த ஆட்டத்தில் 131 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அந்நிய மண்ணில் இது அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி போர் ஆஃப் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி