IND vs WI 3rd T20: அறிமுக வீரராக களமிறங்கும் ஜெய்ஸ்வால் - இரு அணிகளிலும் முக்கிய மாற்றங்கள்! வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
Aug 08, 2023, 08:12 PM IST
டெஸ்ட் தொடரை தொடர்ந்து தற்போது டி20 போட்டியிலும் இளம் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அறிமுகமாகியுள்ளார். இந்தியா அணி டி20 தொடரை வெல்வதற்கு கடைசி வாய்ப்பாக அமைந்திருக்கும் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நெருக்கடி நிலை இந்திய அணிக்கு உருவாகியுள்ளது.
அதேபோல் இன்றைய போட்டியில் இந்திய வெற்றி பெற்றால் டி20 தொடரை வென்றுவிடும். இந்த சூழ்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரராக இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் லெக் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நெருக்கடி நிலை இந்திய அணிக்கு உருவாகியுள்ளது.
அதேபோல் இன்றைய போட்டியில் இந்திய வெற்றி பெற்றால் டி20 தொடரை வென்றுவிடும். இந்த சூழ்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரராக இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2023 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜெய்ஸ்வால், அந்த அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று 625 ரன்கள் எடுத்தார். அதிரடியாகவும், அதே சமயம் பொறுப்புடனும் பேட் செய்து ரன்களை குவித்த இவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால், அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்து சாதனை புரிந்தார். டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்ஸ் பேட் செய்து 266 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால் இந்திய அணியின் டாப் ஸ்கோரராக இருந்தார்.
இதைத்தொடர்ந்து டி20 தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று, கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் களமிறங்கும் நிலையில் அறிமுக போட்டியில் விளையாடும் வாய்பைப் பெற்றுள்ளார். இவரது வருகை இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலப்படுத்தும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்