தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Eng, T20 Semi Final: மழையால் ஆட்டம் ரத்தானால் வெற்றியாளர் யார்?

Ind vs Eng, T20 semi final: மழையால் ஆட்டம் ரத்தானால் வெற்றியாளர் யார்?

Nov 10, 2022, 11:25 AM IST

google News
நான்கு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. சில போட்டிகள் மழையால் DLS விதிமுறைப்படி முடிவுகளும் மாறியது. இந்த சூழ்நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் வெற்றியாளர் எப்படி தீர்மானிக்கப்படுவார் என்பதை பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இதன் மூலம் மூன்றாவது முறைாக டி20 உலகக் கோப்பை பைனலில் விளையாடவுள்ளது.

இதையடுத்து இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - இங்கிலாந்து இடையே அடிலெய்டில் இன்று நடைபெறுகிறது. பேட்டிங், பெளலிங், பீல்டிங் என இருஅணிகளும் சமபலம் பொருந்திய அணிகளாவே இருந்து வருகிறது. அடிலெய்டு ஆடுகளத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே அமைந்து. அஅதேசமயம் கடைசியாக நடைபெற்ற இருபோட்டிகளில் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

இன்றைய ஆட்டத்தின்போது மழை குறுக்கீடு இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் முடிவு எப்படி தீர்மானிக்கூடும் என்பதை பார்க்கலாம்.

ஐசிசி இந்த முறை அரையிறுதி, இறுதி என நாக்அவுட் ஆட்டங்களுக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கியுள்ளது. ஒரு வேளை மழையால் ஆட்டம் பாதிக்கும்பட்சத்தில் ரிசர்வ் நாளில் ஆட்டம் எங்கு நிறுத்தப்பட்டதோ அங்கிருந்தே மீண்டும் தொடங்கும்.

அந்த நாளில் போட்டி முழுமையாக நடைபெறவில்லை என்றால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த முடிவானது அரையிறுதி போட்டிக்கு மட்டும் பொருந்தும்.

அதேசமயம் இறுதிப்போட்டியில் மழைக்குறுக்கீடு இருந்து, ரிசர்வ் நாளிலும் போட்டியை தொடர முடியாமல் போனால் இறுதி போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். அத்துடன் சாம்பியன் கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

நவம்பர் 13ஆம் தேதி மெர்போர்னில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் மழையான ரத்தான நான்கு ஆட்டங்களில் மூன்று போட்டிகள் மெல்போர்னில் நடைபெறுவதாக இருந்தது.

தற்போது மழை பாதிப்பு மெல்போர்னில் தொடர்ந்து வருவதால், இறுதிப்போட்டில் மழை பெரும் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி