illavenil Valarivan : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தங்க மங்கை இளவேனில் வாலறிவன் பிறந்த தினம் இன்று!
Aug 03, 2023, 12:17 PM IST
Illavenil Valarivan : இந்தாண்டு ஜீலை 29ம் தேதி உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீராங்கனையான இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
இளவேனில் வாலறிவன், தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த துப்பாக்கி சூடுதல் வீராங்கனை. 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிறந்தவர். இளவேனில் 2018ம் ஆண்டு ஐஎஸ்எஸ்எஃப் ஜீனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். தங்கப்பதக்கத்தையும் வென்றார். 2019ம் ஆண்டு நடைபெற்ற உலக பல்கலைக்கழக போட்டிகளில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
2019ம் ஆண்டில் இவர் முதல் ஐஎஸ்எஸ்எஃப் 10 மீட்டர் ஏர் ரைபிஃள் உலக கோப்பையை வென்றார். ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்றார். இவருக்கு 2022ம் ஆண்டு அர்ஜீனா விருது வழங்கப்பட்டது.
2019ம் ஆண்டு மியூனிச்சில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நான்காவது இறுதிச்சுற்றை நிறைவு செய்தார். இவரது முதல் தனிநபர் தங்க பதக்கத்தை சீனியர் பிரிவில் 250.5 புள்ளிகள் பெற்று வாங்கினார். இவர் இரண்டு ஜீனியர் உலக கோப்பைகளை வென்றுள்ளார். அவை தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் ஆகும்.
இந்தாண்டு ஜீலை 29ம் தேதி உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீராங்கனையான இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுபவர் இளவேனில் வாலறிவன். இவர் 2020ம் ஆண்டு 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் டோக்கியோவில் நடந்த போட்டியில் இந்தியாவின நம்பிக்கையாக பார்க்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்