தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Icc Test Team 2022:ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் ஒரேயொரு இந்தியர்! யார் தெரியுமா?

ICC Test Team 2022:ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் ஒரேயொரு இந்தியர்! யார் தெரியுமா?

Jan 24, 2023, 07:44 PM IST

ஐசிசி சிறந்த டி20 ஆடவர் அணியில் 3 இந்தியர்கள், பெண்கள் அணியில் 4 இந்தியர்கள் என மொத்தம் 7 பேர் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தினர். இதற்கு அடுத்தப்படியாக ஐசிசி வெளியிட்டிருக்கும் 2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் ஒரேயொரு இந்தியர் மட்டுமே இடம்பிடித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. (ANI)
ஐசிசி சிறந்த டி20 ஆடவர் அணியில் 3 இந்தியர்கள், பெண்கள் அணியில் 4 இந்தியர்கள் என மொத்தம் 7 பேர் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தினர். இதற்கு அடுத்தப்படியாக ஐசிசி வெளியிட்டிருக்கும் 2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் ஒரேயொரு இந்தியர் மட்டுமே இடம்பிடித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

ஐசிசி சிறந்த டி20 ஆடவர் அணியில் 3 இந்தியர்கள், பெண்கள் அணியில் 4 இந்தியர்கள் என மொத்தம் 7 பேர் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தினர். இதற்கு அடுத்தப்படியாக ஐசிசி வெளியிட்டிருக்கும் 2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் ஒரேயொரு இந்தியர் மட்டுமே இடம்பிடித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டி, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

இந்தப் போட்டிகளில் இந்திய பேட்டிங்கை பொறுத்தவரை ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சத்தேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், மயங்க் அகர்வால்,,சுப்மன் கில், ரிஷப் பண்ட் உள்ளிட்டோரும், பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, அஸ்வின் உள்ளிட்டோரும் விளையாடினர்.

இதையடுத்து தனது அபார பேட்டிங், விக்கெட் கீப்பிங் மூலம் மூலம் முத்திரை பதித்த ரிஷப் பண்ட் மட்டுமே ஐசிசியின் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மொத்தம் 12 டெஸ்ட் இன்னிங்ஸில் பங்கேற்ற அவர் 680 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்துள்ள பண்ட், 90.90 ஸ்டிரைக்ரேட்டும், 61.81 பேட்டிங் சராசரியும் வைத்துள்ளார்.

இந்த அணியில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரேக் பரத்வெய்ட் ஆகியோர் ஓபனர்களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசேனே மூன்றாவது பேட்ஸ்மேனாகவும், அவரை தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்டர்களாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்து மற்றொரு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டராகவும், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவும் உள்ளனர்.

பின்னர் பெளலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், நாதன் லயன், தென்ஆப்பரிக்காவின் ககிசோ ரபாடா, இங்கிலாந்தில் ஜேமி ஆண்டர்சன் ஆகியோர் உள்ளனர்.

சிறந்த டெஸ்ட் அணியில் நான்கு ஆஸ்திரேலியர்கள், மூன்று இங்கிலாந்து வீரர்கள் உள்பட இந்தியா, தென்ஆப்பரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளில் இருந்து ஒருவர் இடம்பிடித்துள்ளனர்.

சர்ப்ரைசாக நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரரும் இடம்பெறவில்லை.

ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2022

ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2022:

உஸ்மான் கவாஜா, கிரேக் பரத்வெய்ட், மார்னஸ் லபுசேனே, பாபர் அசாம், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, நாதன் லயன், ஜேமி ஆண்டர்சன்

டாபிக்ஸ்