ICC Fined:ஆஷஸ் முதல் டெஸ்ட் வென்ற ஆஸி.,க்கும், தோல்வியுற்ற இங்கிலாந்துக்கும் அபராதம் - 2 புள்ளிகள் கழிப்பு!ஏன் தெரியுமா?
Jun 21, 2023, 05:27 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு தலா 2 புள்ளிகளை ஐசிசி திரும்ப பெறற்றிருப்பதோடு, இரண்டு அணிகளுக்கும் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளத
ஆஷஸ் கிரிக்கெட் தொடரில், பிரிமிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி நாள் கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணி புள்ளிகணக்கை தொடங்கியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் பெற்ற புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. அத்தோடு இல்லாமல் இரு அணிகளுக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மேட்ச் ரெப்ரியான ஆண்டி பைகிராப்ட், திட்டமிட்டபடி இல்லாமல் இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்து வீசியதை கருத்தில் கொண்டு இரு அணிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை இரு அணி கேப்டன்களும் ஒப்புக்கொண்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு 12 புள்ளிகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது 2 புள்ளிகள் திரும்ப பெறப்பட்டிருப்பதால் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. தோல்வி அடைந்த இங்கிலாந்துக்கு புள்ளிகள் எதுவும் கிடைக்காத நிலையில், தற்போது 2 புள்ளிகள் திரும்ப பெறப்பட்டிருக்கும் நிலையில் -2 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.22, குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்கள் தொடர்பாக, வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடும் நிபந்தனைகளின் பிரிவு 16.11.2 படி, அணிகள் தாமதிக்கும் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் இரு அணிகளின் மொத்த புள்ளிகளில் இருந்து கழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் குறைவான ஓவர் ரேட்டுக்காக இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு மீண்டும் குறைந்த ஓவர் ரேட்டுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்