Paris Olympics: வரலாறு படைத்த இந்திய வீரர்..! தோனி கதையை போல் இருக்கும் துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே வாழ்கை
Aug 01, 2024, 08:00 AM IST
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீ ரைபிள் 3 பொஷிசன்ஸ் விளையாட்டியில் தங்க பதக்கம் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனை புரிந்துள்ளார் துப்பாக்கி சுடுதல் வீரரான ஸ்வப்னில் குசலே. கிரிக்கெட் வீர்ர தோனி கதையை போல் துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே வாழ்கை அமைந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே, கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை போல், ஒரு காலத்தில் டிக்கெட் சேகரிப்பாளராக இருந்துள்ளாராம்.
ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார் ஸ்வப்னில் குசலே. இவர் இந்தியாவுக்கு கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்று தந்த கேப்டன் எம்.எஸ்.தோனியை போல் இந்திய ரயில்வேயில் டிக்கெட் சேகரிப்பாளராகவும் இருந்ததாக கூறியுள்ளார்.
ஸ்வப்னில் குசலே பின்னணி
மகாராஷ்டிராவின் மாநிலம் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான, ஸ்வப்னில் குசலே 2012 முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஆனால் அவர் பாரில் ஒலிப்பிக்கில் களமிங்குவதற்கு முன்12 ஆண்டுகள் வரை காத்திருந்துள்ளார்.
அமைதி, பொறுமை ஆகியவை ஒரு துப்பாக்கி சுடும் வீரருக்கு முன் இருக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும். இந்த பண்புகளே தோனியின் ஆளுமையின் தனிச்சிறப்பாக இருந்ததோடு அவரை உலகுக்கு தனித்து காட்டியது. அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே வாழ்க்கை, தோனியின் வாழ்க்கை கதையுடன் தொடர்புடையது என்பதில் ஆச்சரியமில்லை.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை பல முறை பார்த்துள் ஸ்வப்னில் குசலே, அவரை போல் நாட்டுக்கு பெருமையை தேடி தருவார் என்கிற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
குசேலே தந்தையும், சகோதரரும் மாவட்டப் பள்ளியில் ஆசிரியர்களாகவும், தாயார் கம்பல்வாடி கிராமத்தின் சர்பஞ்சாகவும் உள்ளனர்.
ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப்போட்டி
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப் போட்டியில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தால், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்காக முக்கிய சாதனை படைத்தவர்களின் பட்டியலில் குசலே இடம்பிடிப்பார்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து குசேலே கூறியதாவது, "நான் ஷூட்டிங் உலகில் குறிப்பிட்ட யாரையும் பின்தொடர்வதில்லை. அதற்கு வெளியே, தோனியை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் களத்தில் இருப்பதைப் போல அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்பது துப்பாக்கி சுடுதலில் அடிப்படை தேவையாக உள்ளது.
அவருடைய கதையை, என் கதையுடன் தொடர்புபடுத்தி கொள்வேன். ஏனென்றால் நான் அவரை போலவே டிக்கெட் சேகரிப்பாளராக இருந்துள்ளேன்," என்றார்.
குசலே 2015 முதல் மத்திய ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார்.
முன்னதாக, பதக்க சுற்றுக்கான போட்டியில் இந்தியாவின் குசேலே கடுமையான போட்டியை வெளிப்படுத்தி ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
பதக்க தகுதி சுற்று போட்டிகள்
இந்த சுற்றில் குசேலேவுடன் தகுதி பெறும் போட்டியில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் 590 புள்ளிகளை பெற்றிருந்தனர். ஆனால் எட்டாவது மற்றும் கடைசி தகுதி இடத்தைப் பிடித்த ஜிரி ப்ரிவ்ரட்ஸ்கி மற்றும் பீட்ர் நிம்பர்ஸ்கியுடன் ஒப்பிடும்போது குசலே இன்னர் 10ஸ் இல் 38 புள்ளிகளை கொண்டிருந்தார்.
இந்த சுற்றில் மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் தோமர் 589 புள்ளிகளுடன் 11வது இடத்தை பிடித்தார். சீனாவின் லியு யுகுன் முதலிடத்தை பிடித்தார்.
இறுதிப் போட்டியில் தனது வகைப்பாடு என்ன என்பது பற்றி பயிற்சியாளர் சொல்லும் வரை குசலே தெரியவில்லை. அவர் ப்ரோனில் 197 புள்ளிகளையும், நின்றவாறு 195 புள்ளிகளையும் பெற்றார். முழங்காலில் அமர்ந்து அதிகமாக புள்ளிகள் பெறவில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்