David Warner: ‘வார்னர் ரன் குவிப்பில் ஈடுபடுவார்’-ரிக்கி பாண்டிங் நம்பிக்கை
Jun 19, 2023, 04:24 PM IST
Ricky Ponting: ஆஷஸ் டெஸ்டின் முதல் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வெறும் 9 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் ஆஸி., கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தியதாகவும், அவர் அதிரடி காண்பிப்பார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
வார்னரின் சமீபத்திய ஃபார்ம் காரணமாக டெஸ்ட் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆஷஸ் டெஸ்டின் முதல் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வெறும் 9 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரது பந்துவீச்சில் 15வது முறையாக வார்னர் ஆட்டமிழந்தார்.
டெஸ்டில் பிராடுக்கு எதிராக, வார்னர் 734 பந்துகளில் 26.46 என்ற சராசரியில் 397 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் மட்டும் பிராட், 9 முறை வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். இங்கிலாந்தில் 329 பந்துகளை வார்னருக்கு வீசிய பிராட், 159 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 25.14 சராசரியுடன் 704 ரன்கள் எடுத்துள்ளார். 28 இன்னிங்ஸ்களில் 7 அரை சதங்கள் அடித்துள்ளார்.
நிகழாண்டில், அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஏழு இன்னிங்ஸ்களில் 12.71 சராசரியுடன் 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த ஆண்டு, அவர் 11 டெஸ்ட் போட்டிகளில் 30 க்கும் மேற்பட்ட சராசரியுடன் 571 ரன்கள் எடுத்தார். 20 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் மற்றும் 200* சிறந்த ஸ்கோர் ஆக இருக்கிறது.
இந்நிலையில், வார்னர் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில், "WTC இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் மிகவும் நன்றாக இருப்பதாக நான் நினைத்தேன்; அவர் இங்கு முதல் இன்னிங்ஸில் ஒன்பது ரன்கள் எடுத்திருந்தாலும், அவர் உண்மையில் அவரது இன்னிங்ஸைத் தொடங்கிய விதம் நன்றாக இருந்தது. அதனால் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்