தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hardik Pandya: 'நான் ஒரு ஆமை, முயல் அல்ல…': பந்துவீச்சு குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டி

Hardik Pandya: 'நான் ஒரு ஆமை, முயல் அல்ல…': பந்துவீச்சு குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டி

Manigandan K T HT Tamil

Jul 31, 2023, 05:30 PM IST

google News
Ind vs WI: இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) மே 29 அன்று முடிவடைந்த பின்னர் ஹர்திக் பாண்டியாவுக்கு முழு இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைத்தது. (AP)
Ind vs WI: இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) மே 29 அன்று முடிவடைந்த பின்னர் ஹர்திக் பாண்டியாவுக்கு முழு இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைத்தது.

Ind vs WI: இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) மே 29 அன்று முடிவடைந்த பின்னர் ஹர்திக் பாண்டியாவுக்கு முழு இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைத்தது.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 ஐ எதிர்கொள்வதால் கணிசமாக அதிக பந்துவீச்சு பணிச்சுமையை ஏற்கத் தயாராக இருப்பதாக இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) மே 29 அன்று முடிவடைந்த பின்னர் ஹர்திக் பாண்டியாவுக்கு முழு இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைத்தது.

தற்போது வெஸ்ட் இண்டீஸில் ஒரு நாள் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார்.

ஓய்வு நேரத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மூன்று வாரங்களுக்கு பயிற்சி மேற்கொண்டார், அங்கு திறன் மற்றும் உடற்தகுதி இரண்டிலும் சமமான கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது வெஸ்ட் இண்டீஸில் விளையாடி வருகிறார்.

நாளை 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என் உடல் நன்றாக இருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு அதிக ஓவர்கள் வீச வேண்டும். நான் இப்போது ஒரு ஆமை, முயல் அல்ல. உலகக் கோப்பை வரும்போது எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்.

3வது ஒரு நாள் கிரிக்கெட் சவாலானதாகவும், த்ரிலிங்காகவும் இருக்கும். ஏனெனில் தொடரை கைப்பற்றப் போவது யார் என்ற முக்கியப் போட்டி இது. வீரர்களுக்கு நாளை போட்டி சவாலானதாக அமையும்; இப்போது தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால் நாங்கள் சோதிக்கப்படுவோம். அடுத்த ஆட்டம் பார்வையாளர்களுக்கும் வீரர்களுக்கும் விருந்து படைக்கும்.

2வது ஒரு நாள் கிரிக்கெட்டில் நாங்கள் நினைத்தபடி பேட்டிங் செய்யவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருந்தன என்றார் ஹர்திக் பாண்டியா.

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நாளை 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடக்கவுள்ளது. இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இந்தத் தொடரில் 2 ஆட்டங்களிலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை கருத்தில் கொண்டே ‘நான் ஆமை, முயல் அல்ல’ என கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி