தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Spl: இந்தியாவின் ஸ்னூக்கர்-பில்லியர்ட்ஸ் முகம்-பங்கஜ் அத்வானிக்கு இன்று பிறந்த நாள்!

HT Sports SPL: இந்தியாவின் ஸ்னூக்கர்-பில்லியர்ட்ஸ் முகம்-பங்கஜ் அத்வானிக்கு இன்று பிறந்த நாள்!

Manigandan K T HT Tamil

Jul 24, 2023, 06:40 AM IST

google News
இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

பங்கஜ் அர்ஜன் அத்வானி இந்திய பில்லியர்ட்ஸ் மற்றும் தொழில்முறை ஸ்னூக்கர் வீரர் ஆவார்.

இவர் 25 முறை சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சம்மேளனத்தின் (ஐ.பி.எஸ்.எஃப்) உலக சாம்பியனாவார்.

இந்தியாவின் ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ஸ் விளையாட்டின் முகம் என இவரை குறிப்பிடலாம்.

இவருக்கு இன்று பிறந்த நாள் (ஜூலை 24). நாம் கிரிக்கெட் வீரர்களை பற்றி மட்டுமே அதிகம் அறிந்து வைத்திருக்கிறேன். ஆனால், விளையாட்டு என்பது கடல் போன்றது. எண்ணற்ற விளையாட்டுகளும், அதில் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

அதிலும், கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் அதிகம் கொண்ட நமது தேசத்திலிருந்து பிற விளையாட்டுகளில் கவனம் செலுத்தி அதில் ஜெயித்து உலகத்தின் பார்வையை தன் பக்கம் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

திரைப்படங்களில் பணக்காரர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக நாம் பார்த்த பில்லியர்ட்ஸ்-ஸ்னூக்கர் போன்ற விளையாட்டில் ஜொலித்து வருபவர் தான் பங்கஜ் அத்வானி.

இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

இவரது பயணத்தை அறிவோம். மகாராஷ்டிர மாநிலம், புனேவில் 1985ம் ஆண்டு ஜூலை 24 ம் தேதி பிறந்தார் பங்கஜ் அத்வானி. இவர் சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஆரம்ப காலத்தை குவைத்திலும், பின்னர் பெங்களூரிலும் கழித்தார். பெங்களூரில் தான் கல்லூரி படிப்பை படித்து முடித்தார்.

முன்னாள் தேசிய ஸ்னூக்கர் சாம்பியனான அரவிந்த் சாவூரிடம் ஸ்னூக்கர் பயிற்சி பெற்றார்.

சர்வதேச ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டியில் 24 சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கிறார்.

பில்லியர்ட்ஸில் 16 முறையும், ஸ்னூக்கரில் 8 முறை சாம்பியன் ஆகியிருக்கிறார். ஆசிய அளவில் பில்லியர்ட்ஸில் 7 முறையும், ஸ்னூக்கரில் 3 முறை ஜெயித்திருக்கிறார்.

விளையாட்டைப் பொறுத்தவரை பங்கஜ் அத்வானி தான், இந்தியாவுக்காக அதிக உலக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

'புனே இளவரசர்' என அன்புடன் அழைக்கப்படும் பங்கஜ் அத்வானிக்கு, 2004 இல் அர்ஜுனா விருதும், 2006 இ் கேல் ரத்னா விருதும் வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.

இரு விருதுகளுமே விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், 2009இல் பத்மஸ்ரீ, 2018இல் பத்ம பூஷன் விருதுகளை இவருக்கு அளித்து பெருமை கொண்டது மத்திய அரசு.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி