தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: இன்று வரையிலும் நிலைத்து நிற்கும் சச்சினின் 16 ஆண்டு கால சாதனை! முறியடிக்க யாருக்கு வாய்ப்பு?

HT Sports Special: இன்று வரையிலும் நிலைத்து நிற்கும் சச்சினின் 16 ஆண்டு கால சாதனை! முறியடிக்க யாருக்கு வாய்ப்பு?

Jun 29, 2023, 06:10 AM IST

google News
சதத்தை மிஸ் செய்வதிலும் தனியொரு சாதனையை தன் வசம் வைத்திருப்பவர் சச்சின் டென்டுல்கர். தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டாங்களில் 90+ ஸ்கோரில் அவுட்டானபோதிலும் சாதனை நிகழ்த்த தவறாமல் போன தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான ஆட்டம் ஒன்றை பற்றி பார்க்கலாம்.

உலகக கோப்பை 2007 தொடரில் படுதோல்வி அடைந்து முதல் ரவுண்டிலேயே இந்திய வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தததோடு, ஒரு தரப்பினரை கொந்தளிப்பு அடையவும் செய்தது. அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடர் கிடையாது என்பதால் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் வங்கதேச சுற்றுப்பயணம் சென்ற இந்தியா, உலகக் கோப்பை தோல்விக்கு பழி தீர்த்தது.

இதைத்தொடர்ந்து அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு தென்ஆப்பரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிராக தனி தனியாக ஒரு நாள் தொடர்களில் பங்கேற்றது. இதில் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த மூன்று போட்டிகளும் அயர்லாந்தின் பெரிய நகரமான பெல்பாஸ்டில் நடைபெற்றது.

மூன்று போட்டிகளில் 200 ரன்கள், 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சச்சின் டென்டுல்கர் தொடர் நாயகன் விருதை பெற்றார். இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் முறையே 99, 93 ரன்கள் எடுத்து சதத்தை நழுவவிட்டார்.

சதத்தை மிஸ் செய்ததில் ஒரு சாதனை வைத்தால் அதிலும் கூட சச்சின் ஒரு சாதனை படைத்திருப்பார். அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் சச்சின் டென்டுல்கர் 99 ரன்களில் அவுட்டானார். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதையடுத்து இரண்டாவது போட்டியில் கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய நிலையில் இருந்த இந்திய அணி, சச்சின் டென்டுல்கரின் அபார ஆட்டத்தால் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் அவர் 93 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அவர் சதத்தை மிஸ் செய்தபோதிலும், அரைசதம் அடித்தபோது ஒரு நாள் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மைல்கல் சாதனையை புரிந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் வீரராக அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

16 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் டென்டுல்கர் நிகழ்த்திய இந்த சாதனை இன்று வரையிலும் முறியடிக்கப்படாமல் உள்ளது. சச்சின் டென்டுல்கருக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் குமார சங்ககாரா, ரிக்க பாண்டிங், ஜெய்சூர்யா ஆகியோர் உள்ளனர். ஆனால் இந்த மூன்று கிரிக்கெட்டர்களும் ஓய்வு பெற்ற நிலையில், இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் விராட் கோலி சச்சினின் இந்த 16 ஆண்டு சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

சச்சின் டெல்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 18, 426 ரன்கள் என யாராலும் அவ்வளவு எளிதில் எட்டிவிட முடியாத சாதனையை புரிந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி