தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special:ஒரே இன்னிங்ஸில் கும்ப்ளேவின் 10 விக்கெட் பின்னணியில் இருந்த நபர்!இந்திய உள்ளூர் கிரிக்கெட் Allrounder

HT Sports Special:ஒரே இன்னிங்ஸில் கும்ப்ளேவின் 10 விக்கெட் பின்னணியில் இருந்த நபர்!இந்திய உள்ளூர் கிரிக்கெட் Allrounder

Jun 20, 2023, 08:19 PM IST

google News
டெல்லியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் எடுத்து உலக சாதனை புரிந்த போட்டியில், கும்ப்ளே பவுலிங் எண்டில் அவர் எடுத்த அத்தனை விக்கெட்டுகளுக்கும் ஆள்காட்டி விரலை தூக்கி காட்டியவர் அம்பயர் ஆரணி ஜெயப்பிரகாஷ்.

கர்நாடகாவை சேர்ந்த ஆரணி ஜெயப்பிரகாஷ், மைசூர் அணிக்காக 1971முதல் 73 வரை ரஞ்சி கோப்பை தொடரில் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கினார். கர்நாடகா மாநில கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் மைசூர் என்ற பெயரிலேயே இருந்த வந்ததில் இருந்த விளையாடி வந்த ஜெயப்பிரகாஷ் பின்னர் அந்த அணியின் பெயர் மாற்றம் வரை விளையாடியுள்ளார். ஆறு ரஞ்சி கோப்பை பைனல்களில் விளையாடியுள்ள இவர் மூன்று முறை வெற்றி, மூன்று தோல்விகளை பெற்ற அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆல்ரவுண்டரான ஜெயப்பிரகாஷ் முதல் தர கிரிக்கெட், பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் என மொத்தம் 94 ஆட்டங்களில் விளையாடி 3942 ரன்கள் அடித்துள்ளார். பவுலிங்கிலும் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் கர்நாடகா அணிக்காக மட்டுமே விளையாடியிருக்கும் ஜெயப்பிரகாஷ், ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடியது கிடையாது. ஆனால் சர்வதேச அம்பயராக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளிலும், ஏராளமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனிலும் அம்பயராக இருந்துள்ளார்.

ஜெயப்பிரகாஷ் அம்பயர் செய்த முக்கியமான போட்டியாக 1999ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையே டெல்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி அமைந்திருந்தது. இந்த போட்டியில்தான் ஒரே இன்னிங்ஸில் இந்திய ஸ்பின் பவுலரான அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் அனில் கும்ப்ளே பந்து வீசிய அனைத்து ஓவர்களிலும், அவரது எண்டில் அம்பயர் செய்தவர் ஜெயப்பிரகாஷ்தான். அந்த வகையில் கும்ப்ளே வீழ்த்திய அனைத்து விக்கெட்டுகளையும் தனது ஆள்காட்டி விரலை மேலே உயர்த்தி அவுட் என சிக்னல் செய்தவர் இந்த ஜெயப்பிரகாஷ்தான்.

இவரது அம்பயரிங் மீது சில விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற தொடரில் இவரது தவறான முடிவுகள் சர்ச்சையை கிளப்பின. கடைசியாக 2002இல் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார்.

இதன் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் அம்பயராக செயல்பட்ட ஜெயபிரகாஷ், 2003 உலகக் கோப்பை தொடரில் செயல்பட்டார். ஐபிஎல் முதல் தொடரிலும் 7 போட்டிகளில் அம்பயராக இருந்த ஜெயப்பிரகாஷ் அதே ஆண்டில் ஓய்வை அறிவித்தார்.

23 டெஸ்ட், 54 ஒரு நாள், 20 டி20 போட்டிகளுடன், 50 உள்ளூர் கிரிக்கெட்டில் அம்பயராக இருந்துள்ள ஜெயப்பிரகாஷ் இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி