தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: கும்ப்ளேவுக்கு முன்னரே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பரிக்கா ஸ்பின்னர் தெரியுமா?

HT Sports Special: கும்ப்ளேவுக்கு முன்னரே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பரிக்கா ஸ்பின்னர் தெரியுமா?

Aug 09, 2023, 06:30 AM IST

google News
பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் தரமான பவுலிங் மூலம் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆச்சர்யபடுத்தினார் லெக் பிரேக் ஸ்பின் பவுலரான தென்ஆப்பரிக்காவை சேர்ந்த எர்னி வோக்லர்.
பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் தரமான பவுலிங் மூலம் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆச்சர்யபடுத்தினார் லெக் பிரேக் ஸ்பின் பவுலரான தென்ஆப்பரிக்காவை சேர்ந்த எர்னி வோக்லர்.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் தரமான பவுலிங் மூலம் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆச்சர்யபடுத்தினார் லெக் பிரேக் ஸ்பின் பவுலரான தென்ஆப்பரிக்காவை சேர்ந்த எர்னி வோக்லர்.

சர்வதேச கிரிக்கெட்டை விட உறையவைக்கும் சாதனைகள் உள்ளூர் கிரிக்கெட் நடப்பதுண்டு. அந்த வகையில் 20ஆம் நூற்றாண்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பரிக்காவை சேர்ந்த பவுலர் என்ற பெருமைக்கு உரியவராக இருப்பவர் எர்னி வோக்லர். இவரை எர்னஸ்ட் வோக்லர் என்று அழைப்பார்கள்.

சர்வதேச நாடுகளுக்கான போட்டியை காட்டிலும் மாகணங்களாக பிரிந்து இருந்த பகுதிகளுக்கு இடையிலான போட்டியில் 1800இன் இறுதி காலகட்டத்திலும், 1900 தொடக்க காலகட்டத்திலும் மிகவும் பிரபலம். அந்த வகையில் ஆப்பரிக்காவின் கிழக்கு மாகணம் அணிக்காக விளையாடிய வோக்லர், மத்திய ஆப்பரிக்காவை சேர்ந்த கிரிகுவாலாந்து மேற்கு அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

லெக் பிரேக் பவுலரான இவர், லெக் பிரேக் போன்ற பவுலிங் ஆக்‌ஷனில் ஆஃப் பிரேக் பந்து வீசுவதும், தேவைப்படும் நேரத்தில் வேகப்பந்து வீசிவதிலும் வல்லவராக இருந்துள்ளார். 1909 - 10ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணி தொடரை வெல்வதற்கு காரணமாக இருந்துள்ளார்.

லெக் பிரேக் பவுலிங்கில் பேட்ஸ்மேனை மிரட்டி வந்த வோக்லர் தான், முதல் கூக்ளி பவுலராக திகழ்ந்தார் என்ற பேச்சும் உள்ளது. வெறும் பவுலராக இல்லாமல் கடைசி கட்டத்தில் களமிறங்கினாலும் பேட்டிங்கிலும் பங்களிப்பு அளிக்ககூடிய வீரராக இருந்துள்ளார். சில போட்டிகளில் பேட்டிங்கிலும் அணிக்கு தனது பங்களிப்பு அளித்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிங் பேரில் அவுட்டான முதல் பேட்ஸ்மேன் இவர்தான் என்று விஸ்டன் கிரிக்கெட்டில் கூறப்பட்டுள்ளது. கிங் பேர் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் அடிக்காமல் முதல் பந்தில் டக் அவுட் ஆவதாகும்.

தென் ஆப்பரிக்கா அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர், 64 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 83 போட்டிகளில் 393 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இவரது சிறந்த பவுலிங், 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட் வீழ்த்தியதாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய லெக் பிரேக் பவுலர் கும்ப்ளே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு முன்னரே தென் ஆப்பரிக்காவை சேர்ந்த எர்னி வோக்லர் இதை செய்துள்ளார்.

தென்ஆப்பரிக்கா அணியின் சிறந்த ஸ்பின்னராக இருந்து வந்த எர்னி வோக்லர் ஆக்ஸ்ட் 9, 1946, தனது 69வது வயதில் இறந்தார். இன்று அவரது 147வது நினைவு நாளாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி