Hockey5s Women World Cup: சாம்பியன் ஆன நெதர்லாந்து! இந்திய மகளிர் ரன்னர் அப்
Jan 28, 2024, 11:44 AM IST
ஹாக்கி 5ஸ் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதியில் நெதர்லாந்து மகளிரிடம் தோல்வியை தழுவிய இந்திய மகளிர் ரன்னர்அப் ஆகியுள்ளது.
ஐந்து பேர் மட்டுமே விளையாடும் ஹாக்கி 5ஸ் மகளிர் உலகக் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்றது. மஸ்கட் நகரில் நடைபெற்ற இந்த தொடர் முதல் மகளிர் 5ஸ் ஹாக்கி தொடராக அமைந்துள்ளது.
கடந்த 24ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இதையடுத்து இறுதிப்போட்டியில் இந்தியா மகளிர் - நெதர்லாந்து மகளிர் அணிகள் மோதின. இந்த போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி முதல் 5ஸ் ஹாக்கி உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் ஜோதி சாத்ரி 20வது நிமிடத்திலும், ருதுஜா தாதாசோ பிசல் 23வது நிமடத்திலும் அணிக்கு கோல்களை பெற்று தந்தனர். இதன் பின்னர் அணியினரின் கோல் முயற்சிகள் அனைத்தும் பலன் கிடைக்காமல் போனது.
நெதர்லாந்து வீராங்கனைகள் ஆட்டத்தின் 2, 4, 8, 11, 13, 14வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து முன்னிலை பெற்றதுடன், இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடியை தந்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் கடைசி கோல் ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் கிடைத்தது.
இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ஹாக்கி 5ஸ் முதல் தொடரிலேயே இறுதிபோட்டி வரை சென்றிருக்கும் நிலையில் பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்த தொடரில் விளையாடிய வீராங்கனைகள் அனைவருக்கும் தலா ரூ. 3 லட்சம், ஹாக்கி அணியில் இடம்பிடித்திருந்த அனைத்து ஆதரவு பணியாளர்களுக்கும் ரூ. 1.5 லட்சம் பரிசுதொகையை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
ஹாக்கி விளையாட்டில் மிகவும் ஆதிக்கம் மிக்க அணியாக நெதர்லாந்து இருந்து வருகிறது. தற்போது 5 வீரர்கள் மட்டும் 5ஸ் ஹாக்கி தொடரிலும் தங்களது கொடியை நாட்டியுள்ளது நெதர்லாந்து மகளிர் அணி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்