தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hockey Women Junior : ஹாக்கியில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்திய இந்தியா!

Hockey Women Junior : ஹாக்கியில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்திய இந்தியா!

Divya Sekar HT Tamil

Jun 06, 2023, 10:04 AM IST

ஹாக்கியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
ஹாக்கியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

ஹாக்கியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

ஜப்பானின் ககாமிகரா நகரில் மகளிருக்கான ஆசிய ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. 8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

'ஏ' பிரிவில் இந்தியாவுடன், தென்கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான், சீனத்தைபே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, கஜகஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்திய அணி இன்று மலேசியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் மிக கடுமையாக போரடின. இந்திய அணி தரப்பில் 10-வது நிமிடத்தில் மும்தாஸ் கானும், 26-வது நிமிடத்தில் தீபிகாவும் கோல் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பிரிவு ஏ-வில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. இரு வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளுடன் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தனது 3-வது ஆட்டத்தில் இன்று கொரியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி