Hockey India: ஆசிய சாம்பியன்ஷிப் நெருங்கும் நிலையில் சீனியர் ஆடவர் அணி முக்கிய குழு அறிவிப்பு
Jun 25, 2023, 04:04 PM IST
Asian Champions Trophy: இந்திய ஆடவர் ஹாக்கி அணி கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனாவை எதிர்த்து மோதுகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஹாக்கி இந்தியா சீனியர் ஆடவர் அணியை அறிவித்துள்ளது.
பெங்களுருவில் உள்ள SAI மையத்தில் ஜூன் 26 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ள மூத்த ஆண்களுக்கான தேசிய பயிற்சி முகாமிற்கு ஹாக்கி இந்தியா ஞாயிற்றுக்கிழமை 39 பேர் கொண்ட முக்கிய அணியை அறிவித்துள்ளது.
ஜூலை 25 முதல் 30 வரை நடைபெறும் 100வது ஆண்டு ஸ்பானிஷ் ஹாக்கி ஃபெடரேஷன் - சர்வதேச போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக ஸ்பெயினில் உள்ள டெர்ராசாவுக்கு இந்திய அணி மேற்கொள்ளும் பயணத்திற்கு முன்னதாக தேசிய முகாம் பயிற்சி முடிவடையும்.
நான்கு நாடுகள் பங்கேற்கும் போட்டி தொடர்ந்து நடைபெறும். மதிப்புமிக்க ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் ஆகஸ்ட் 3 அன்று தொடங்குகிறது. இதில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனாவை எதிர்த்து மோதுகிறது.
முக்கிய குழுவில் கோல்கீப்பர்கள் கிரிஷன் பகதூர் பதக், பி.ஆர்.ஸ்ரீஜேஷ், சூரஜ் கர்கேரா, பவன் மாலிக், பிரசாந்த் குமார் சௌஹான், மற்றும் டிஃபண்டர்கள் ஹர்மன்பிரீத் சிங், ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், வருண் குமார், அமித் ரோஹிதாஸ், குரீந்தர் சிங், ஜுக்ராஜ் சிங், மந்தீப் மோர், நிலம் சஞ்சீப் செஸ், சஞ்சய், யஷ்தீப் சிவாச், திப்சன் டிர்கி மற்றும் மன்ஜீத்.
மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மொய்ரங்தெம் ரபிச்சந்திர சிங், ஷம்ஷேர் சிங், நீலகண்ட சர்மா, ராஜ்குமார் பால், சுமித், ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங், முகமது ஆகியோர் முகாமிற்கு அழைக்கப்பட்ட மிட்ஃபீல்டர்கள். ரஹீல் மௌசீன், மனீந்தர் சிங், எஸ்.கார்த்தி, மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், தில்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங், சிம்ரன்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா மற்றும் பவன் ராஜ்பார் ஆகியோர் முன்களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வரவிருக்கும் தேசிய பயிற்சி முகாம் குறித்து பேசிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடந்த FIH ஆண்கள் ஹாக்கி புரோ லீக் 2022/2023 போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.
குறிப்பாக இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள முக்கியமான போட்டிகள் மூலம் ஓரளவு நிலைத்தன்மையை நிலைநிறுத்த முடியும்.
சில பகுதிகளில் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு யூனிட்டாக இணைந்து செயல்படவும் இந்த முகாம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
ஆசிய சாம்பியன்ஷிப் சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஜோவில் நடைபெற உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்