தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hima Das: தவறவிட்ட மூன்று வாய்ப்புகள் - இடைநீக்கம் செய்யப்பட்டார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

Hima Das: தவறவிட்ட மூன்று வாய்ப்புகள் - இடைநீக்கம் செய்யப்பட்டார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

Sep 06, 2023, 03:32 PM IST

google News
இந்தியாவின் அதி வேக ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து வந்த ஹிமா தாஸ், விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அதி வேக ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து வந்த ஹிமா தாஸ், விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அதி வேக ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து வந்த ஹிமா தாஸ், விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முதுகின் கீழ் பகுதி வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார் ஹிமா தாஸ். இதையடுத்து சீனாவில் வரும் 23ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய தடகள அணியில் ஹிமா தாஸ் பெயர் இடம்பெறவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த 12 மாதங்களில் மூன்று முறை ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த ஹிமா தாஸ், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை (நாடா) இடைநீக்கம் செய்துள்ளது.

உலக தடகள ஊக்கமருந்து எதிர்ப்பு (WADA) விதிகளின் கீழ், 12 மாத காலத்துக்குள் மூன்று முறை தன் இருப்பிடத்தை பற்றி எந்தவொரு வீரரும், வீராங்கனையும் தெரிவிக்காமல் இருப்பது அல்லது பரிசோதனைகள் செய்யாமல் தவறுவது ஆகியவை விதி மீறலாக கருதப்படுகிறது.

ஏற்கனவே, யாரிடமும் தகவல் தெரிவிக்காமலேயே தேசிய பயிற்சி முகாமை விட்டு வெளியேறிய ஹிமா தாஸ், அதிகபட்சமாக இரண்டு வருட தடையை எதிர்கொள்ள வேண்டும். ஆனாலும் அவர் செய்த தவறை பொறுத்து குறைந்தபட்சம் ஒரு வருடமாக குறைக்கப்படலாம் என தெரிகிறது.

ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்துவதற்கு தான் இருக்கும் இடத்தை ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார். இது விதிமீறலாக கருதப்படும் நிலையில், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையான ஹிமா தாஸை இடைநீக்கம் செய்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் தனது இருப்பிடம் குறித்த தகவலை 3 முறை அளிக்க தவறியுதோடு, ஊக்க மருந்து பரிசோதனையும் அவர் மேற்கொள்ளாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 23 வயதாகு ஹிமா தாஸ் 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோல் 400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி