தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Sania Mirza : இந்தியாவின் டென்னிஸ் புயல் சான்யா மிர்சா பிறந்த தினம் இன்று!

HBD Sania Mirza : இந்தியாவின் டென்னிஸ் புயல் சான்யா மிர்சா பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil

Nov 15, 2023, 11:17 AM IST

google News
HBD Sania Mirza : இந்தியாவின் டென்னிஸ் புயல் சான்யா மிர்சா பிறந்த தினம் இன்று. இன்றைய நாளில் அவர் குறித்த சில தகவல்களை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.
HBD Sania Mirza : இந்தியாவின் டென்னிஸ் புயல் சான்யா மிர்சா பிறந்த தினம் இன்று. இன்றைய நாளில் அவர் குறித்த சில தகவல்களை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

HBD Sania Mirza : இந்தியாவின் டென்னிஸ் புயல் சான்யா மிர்சா பிறந்த தினம் இன்று. இன்றைய நாளில் அவர் குறித்த சில தகவல்களை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

6 முறை கிராண்ஸ்ட்லாம் பட்டம் வென்றவர். இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் சாம்பியன். 2003ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான தனது டென்னிஸ் வாழ்வில் மகளிர் டென்னிஸில் புதிய உச்சங்களை தொட்டவர்.

பெண்கள் டென்னிஸ் போட்டியில், 43 முறை இரட்டையர் மற்றும் ஒற்றையர் பட்டங்களை வென்றவர். 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸின் செமி ஃபைனலிஸ்ட், இந்தியாவின் பெண் டென்னிஸ் வீராங்கனைகளுள் வெற்றியாளர். மகளில் ஒற்றையர் ரேங்கிங்கில் இடம்பெற்ற ஒரே பெண் டென்னிஸ் வீராங்களை என்றாலும், இரட்டையர் பிரிவில் அதிக போட்டிகளில் வென்றவர்.

மார்டினா ஹிங்கிஸ் உடனான இவரது பாட்னர்ஷிப் இவரது கெரியரில் மிகவும் சிறந்த ஒன்றாக இருந்தது. அவர்கள் இருவரின் ஆட்டம் இந்தியா மற்றும் ஸ்விஸின் ரசிகர்களை மட்டுமல்ல உலக டென்னிஸ் ரசிகர்களையே கவர்ந்த ஒன்று. அவர்கள் இருவரும் தங்களின் கெரியரில் ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும், மகிழ்ச்சியுடனும் எந்த தடையும் இன்றி சேர்ந்து விளையாடினர்.

தனது டென்னிஸ் வாழ்க்கை குறித்து பேசுகையில், ‘நல்ல டென்னிஸ் கோர்ட் கிடைப்பதே முதலில் சவாலான ஒன்றாக இருந்தது. சாணம் போட்டு மெழுகிய தரையில்தான் முதலில் அவர் ஆடத்துவங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 

ஹைதராபாத்தில் வேறு மைதானங்கள் இல்லை. அவருடன் சேர்ந்து விளையாட ஆட்கள், கோச்கள் என துவக்க காலத்தில் அனைத்தும் சவாலாக இருந்ததாக அவர் ஒலிம்பிக்.காம் பாட்கர்ஸ்ட்டுக்கு முன்னர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விளையாட புதிய பந்து கிடைத்தாலே அது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. அது மிக விலை உயர்ந்ததாக இருந்தது. எங்களால் அப்போது அதையெல்லாம் வாங்க முடியவில்லை. அவரின் ஆட்டம் குறித்து முதலில் விமர்சனங்களும் அதிகம் இருந்தன. 

‘பெண்கள் என்பதற்காக எங்களை குறைத்து மதிப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்த அதிர்ஷ்டத்தை நாங்கள் செய்திருந்தோம். அதுதான் வாழ்க்கை முறை என்று நினைத்திருந்தோம். ஆனால் பெண் என்பதால் வேறு விதமாக நடத்தப்படுவதை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். அதுபோல் தனது பெற்றோர் தன்னை நடத்தாததால்தான் தன்னால் சாதிக்க முடிந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

1986ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சான்யா மிர்சா பிறந்தார். ஹைத்ராபாத்தில் வளர்ந்த டென்னிஸ் வீராங்கனைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி