தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Praggnanandhaa: சாதனை தமிழ் மகன்.. சதுரங்க உலகின் ஸ்டார்.. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பிறந்தநாள்

HBD Praggnanandhaa: சாதனை தமிழ் மகன்.. சதுரங்க உலகின் ஸ்டார்.. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பிறந்தநாள்

Aug 10, 2023, 05:30 AM IST

google News
7வயதில் உலக செஸ் சாம்பியன் ஷிப் பட்டம், 10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர், 12 வயதில் இளைய கிராண்ட் மாஸ்டர் 14 வயதில் உலகின் இளையோர் செஸ் சாம்பியன் என தொடங்கிய பிரக்ஞானந்தா இன்று தனது 18 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
7வயதில் உலக செஸ் சாம்பியன் ஷிப் பட்டம், 10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர், 12 வயதில் இளைய கிராண்ட் மாஸ்டர் 14 வயதில் உலகின் இளையோர் செஸ் சாம்பியன் என தொடங்கிய பிரக்ஞானந்தா இன்று தனது 18 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

7வயதில் உலக செஸ் சாம்பியன் ஷிப் பட்டம், 10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர், 12 வயதில் இளைய கிராண்ட் மாஸ்டர் 14 வயதில் உலகின் இளையோர் செஸ் சாம்பியன் என தொடங்கிய பிரக்ஞானந்தா இன்று தனது 18 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

உலக சாம்பியன் ஷிப் பட்டம் பெற்ற சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை திரும்பி பார்க்கலாம்

பிறப்பு

தமிழகத்தின் சென்னை பாடியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் பிரக்ஞானந்தா. இவரது தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர். தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் நாக லட்சுமி. இவரது சகோதரி வைஷாலி. பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் செஸ் வீராங்கனைதான். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஏற்கனவே சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றவர். சிறுவயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அவரது பெற்றோர் அவருக்கு செஸ் விளையாட உரிய பயிற்சி கொடுத்தனர். இந்நிலையில் பிரக்ஞானந்தா தனது 5 வயதில் இருந்து செஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

பிரக்ஞானந்தாவின் சாதனை

பிரக்ஞானந்தா 2013இல் உலக இளைய சதுரங்க போட்டியில் 8 வயது பிரிவில் வென்றார். இதையடுத்து 2016 இல், தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில், வரலாற்றில் மிக இளைய அனைத்துலக சதுரங்க மாஸ்டரானார். அந்த வகையில் அங்கேரியின் பிரபல சதுரங்க வீராங்கனை ஜூடித் போல்காரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்து இந்த சாதனையைப் படைத்தார். பின் கடந்த 2018 ஜூன் 23 இல் இத்தாலியில் நடைபெற்ற இளையவர்களுக்கான சதுரங்கப் போட்டியில், கிராண்ட்மாஸ்டர் மோரோனி லூக்காவை வீழ்த்தினார். அந்த வகையில் தனது 12 ஆண்டு, 10 மாத வயதில் சேர்ஜே கார்ஜக்கினுக்குப் பின் இளையோர்களுக்கான கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். உலகின் 16 முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் அதிவிரைவு இணையவழி சதுரங்கப்போட்டியில் 8 ஆவது சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான நார்வேயைச் சார்ந்த மாக்னசு கார்லசனைத் தோற்கடித்து சாதனை புரிந்தார்.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் என்ற சதுரங்கப்போட்டியில் 2022 மே மாதம் 22 ஆம் நாள் மேக்னசு கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

7வயதில் உலக செஸ் சாம்பியன் ஷிப் பட்டம், 10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர், 12 வயதில் இளைய கிராண்ட் மாஸ்டர் 14 வயதில் உலகின் இளையோர் செஸ் சாம்பியன் என தொடங்கிய பிரக்ஞானந்தா இன்று தனது 18 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரக்ஞானந்தாவின் வெற்றி பயணம் மென்மேலும் தொடர அவரது பிறந்த நாளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாழ்த்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி