HBD Carl Lewis : 10 முறை உலக ஒலிம்பிக் சாம்பியன் அமெரிக்க தடகள வீரர் கார்ல் லீவிஸ் இவ்வுளவு சாதனைகள் படைத்துள்ளாரா?
Jul 01, 2023, 06:15 AM IST
HBD Cari Lewis : 10 முறை உலக ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்க தடகள வீரர் கார்ல் லீவிஸ் படைத்துள்ள சாதனைகளின் பட்டியலை அவரது பிறந்த நாளில் தெரிந்துகொள்வோம்.
பிஃரடெரிக் கார்ல்டன் லீவிஸ், அமெரிக்க தடகள வீரர். 9 ஒலிம்பிக் தங்க மெடல்கள், ஒரு சில்வர் மெடல் என 10 முறை உலக ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் டெல்களை வென்றவர். அவர் 1979 முதல் 1996ம் ஆண்டு வரை அவர் தடகளத்தில் இருந்தார். தொடர்ந்து 4 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற 6 வீரர்களுள் ஒருவர்.
இவர் தடகள வீரர் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் சிறந்து விளங்கியவர். 1981 முதல் 1990 துவக்கம் வரை 100 மீ, 200 மீ மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திய வீரர். இவர் 100 மீ, 4X100 மீ, 4x200 மீ ரிலே ஆகியவற்றிலும் உலக சாதனைகளை படைத்தார்.
இவரது உள் விளையாட்ரங்க நீளம் தாண்டுதல் உலக சாதனை 1984ம் ஆண்டு வரை முறையடிக்கப்படாமல் இருந்தது. இவர் 10 ஆண்டுகளில் 65 வெற்றி முறை வெற்றி பெற்றார். இது விளையாட்டில் யாரும் செய்ய முடியாத சாதனை.
இவர் 100 மீட்டர் ஓட்டத்தில் 10 நொடியில் கடக்கும் சாதனையை 10 முறையும், 200 மீட்டர் ஓட்டத்தில் 20 நொடியில் கடக்கும் சாதனையை 20 முறையும் செய்துள்ளார். 28 அடி தாண்டும் சாதனையை 71 முறை நீளம் தாண்டுதலில் நிகழ்த்தியுள்ளார்.
இவரது சாதனைகள் இவருக்கு பல்வேறு பாராட்டுக்களையும், புகழையும் பெற்று தந்தது. நூற்றாண்டின் உலக தடகள வீரன் என இவரை சர்வசேத தடகள சங்கம் புகழ்ந்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இவரை நூற்றாண்டின் விளையாட்டு வீரர் என பாராட்டியது.
நூற்றாண்டு சிறந்த ஒலிம்பிக் வீரன் என ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ரேட்டட் பாராட்டியது. மூன்று ஆண்டுகள் அந்த ஆண்டின் சிறந்த தடகளவீரர் பட்டத்தை வென்றுள்ளார். இப்படி இவர் புரிந்த சாதனைகள் பல.
தடகளத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் லீவிஸ் நடிகராகி நிறைய படங்களில் நடித்தார். இவருக்கு சொந்தமாக மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் நிறுவனம் உள்ளது. அதில் இவரது சொந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறார்.
லீவிஸ், அலாபாமாவின் பிர்மிங்காமில் 1961ம் ஆண்டு ஜீலை 1ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் வில்லியம் லீவிஸ் மற்றும் எவிலின் நீ லாயர் லீவிஸ் ஆவர். இவரது தாயார் தடை தாண்டுதல் வீராங்கனை. இவரது மூத்த சகோதரர் கிளீவ்லாண்ட லீவிஸ் சாக்கர் விளையாட்டு வீரர். இதுபோன்ற விளையாட்டு பின்னணியில் வந்ததாலோ என்னவோ, விளையாட்டின் முன்னணி வீரர் ஆனார்.
இவரது பெற்றோர் தடகள பயிற்சியளித்து வந்தனர். அதில் இவரும், இவரது சகோதரி கேரலும் பயிற்சிபெற்றனர். அவர் நீளம் தாண்டுதல் வீராங்கனையாக திகழ்ந்தார். 1983ல் உலக சாம்பியன் ஆனார்.
இவருக்கு முதலில இவரது தந்தை பயிற்சியளித்தார். அவர் உள்ளூரில் பல தடகள வீரர்களுக்கு பயிற்சியளித்தார். தனது 13 வயதில் கார்ல் லீவிஸ், நீளம் தாண்டுதலில் கவனம் செலுத்தினார். பின்னர் நியூஜெர்சி பள்ளி கோச்களிடம் பயிற்சி பெற்றபோது இவர் தடகள வீரர் ஆனார். அப்போதே போட்டிகளில் வெற்றி பெற்றதால் பல்வேறு கல்லூரிகளும் லீவிஸை தங்கள் கல்லூரிகளில் சேர அழைப்பு விடுத்தன.
அவர் ஹீஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருக்கு டாம் டெல்லஸ் கோச்சாக கிடைத்தார். பின்னர் அவரே லீவிஸின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு கோச்சாக அமைந்தார். பள்ளி படிப்பை முடித்தபோது அவர் பள்ளி அளவிலான நீளம் தாண்டுதல் சாதனையை முறியடித்திருந்தார்.
இந்நிலையில் தான் அவருக்கு அந்த துயர சம்பவம் நடைபெற்றது. ஒரு ஓட்டப்பந்தய வீரனுக்கு மூட்டில் காயம் ஏற்பட்டால் என்னாகும்? பாவம் லீவிஸ், உடல் ஃபிட்னஸில் இது பிரச்னையை ஏற்படுத்தியது. அவருக்கு அப்போது டாம்தான் வலியின்ற குதிக்க உதவினார்.
அவர் நீளம் தாண்டுதலில் கலக்கிக்கொண்டிருந்த காலத்திலே, தடகளபோட்டிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார். இவரை உலகப்புகழ்பெற்ற மற்றொரு வீரர் ஜெஸ்ஸி ஓவன்சுடன் ஒப்பிட்டு பாராட்டினர். ஜெஸ்ஸி 1930களில் முன்னணி விளையாட்டு வீரர். 1980ம் ஆண்டு அமெரிக்க ஒலிம்பிக் குழுவுக்கு தேர்வானார். அதில் 4x100 மீட்டர் ரிலேவில் இடம்பெற்றார்.
ஆனால் அந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா கலந்துகொள்ளாததால், லிபர்டி பெல் கிளாசிக்கில் விளையாடினார். அது ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளாத நாடுகளுக்கு நடத்தப்பட்ட மாற்று விளையாட்டு போட்டி. அதில் நீளம் தாண்டுதலில் வெண்கலமும், ரிலே குழு தங்கமும் வென்றது. இப்படியாக தனது தடகள ஆட்டம் முழுக்கவே சாதனையாளராக இருந்து பல்வேறு பதக்கங்களையும், பாரட்டுக்களையும் பெற்ற அவரை அவரது பிறந்தநாளில் ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.
டாபிக்ஸ்