Harmanpreet Kaur: இரண்டு போட்டிகளில் தடை! இரண்டு முக்கிய நாக் அவுட் போட்டிகளை மிஸ் செய்யும் ஹர்மன்ப்ரீத்
Jul 26, 2023, 08:23 AM IST
இரண்டு போட்டிகளில் விதிக்கப்பட்டிருக்கும் தடை காரணமாக இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் இரண்டு முக்கிய நாக்அவுட் போட்டிகளை மிஸ் செய்ய உள்ளார்.
கடந்த இரு நாள்களுக்கு முன்னர் வங்கதேசத்துக்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற மூன்றாவது ஒரு போட்டியில் அம்பயரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், ஸ்டம்பை பேட்டால் அடித்துவிட்டு ஆக்ரேஷமாக நடந்து கொண்டார் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்.
இத்தோடு நில்லாமல் போட்டி முடிந்த பிறகு பரிசு வழங்கும் நிகழ்விலும் அம்யர்களின் முடிவை கடுமையாக விமர்சித்த அவர், தொடர் சமநிலையில் முடிந்த நிலையில் கோப்பை வாங்கும்போது வந்த வங்கதேச மகளிர் அணி கேப்டனிடம், நீங்கள் தொடரை சமன் செய்யவில்லை. அம்பயரையும் வர சொல்லுங்கள் என்று கடுமையாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஹர்மன்ப்ரீத் கெளர் செயலுக்கு பலரும் கடுமயான கண்டனங்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் ஹர்மன்ப்ரீத் கெளருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதன் காரணமாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆசிய போட்டிகள் டி20 கிரிக்கெட்டில் அவரால் பங்கேற்க முடியாது.
ஐசிசி தரவரிசைப்படி இந்தியா நேரடியாக காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியா விளையாடும் காலிறுதி, அரையிறுதி போட்டியை ஹர்மன்ப்ரீத் கெளர் மிஸ் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் இந்திய வெற்றி பெற்றால் தங்கப்பதக்கத்துக்காக நடைபெறும் இறுதி போட்டியில் அவர் பங்கேற்பார். இதில் மிக முக்கியமாக இந்தியா காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே மேற்கூறியவாறு ஆசிய போட்டிகள் மிஸ் செய்வார் ஹர்மன்ப்ரீத்.
ஒரு வேளை தோல்வியடைந்தால், ஆசிய விளையாட்டு போட்டிகளை அடுத்து இந்திய மகளிர் அணி விளையாடும் மற்றொரு சர்வதேச போட்டியையும் ஹர்மன்ப்ரீத் மிஸ் செய்வார்.
அதேபோல் ஹார்மன்ப்ரீத் கெளர் ஐசிசி நடத்தை விதிமீறல் லெவல் 2 குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடத்தை விதிமீறலுக்காக மூன்று குறைபாடு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்