தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Harbhajan Praise Pandya: தோனி இடத்தில் பாண்ட்யா - என்ன சொல்கிறார் ஹர்பஜன்

Harbhajan praise pandya: தோனி இடத்தில் பாண்ட்யா - என்ன சொல்கிறார் ஹர்பஜன்

Sep 02, 2022, 10:31 AM IST

google News
இந்திய அணியின் அடுத்த தோனியாக உருவெடுத்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா. அவரைப் போல் மிகவும் அமைதியாக இருந்துகொண்டு பேட்டிங்கும் சிறப்பாக செய்கிறார் என்ற இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த தோனியாக உருவெடுத்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா. அவரைப் போல் மிகவும் அமைதியாக இருந்துகொண்டு பேட்டிங்கும் சிறப்பாக செய்கிறார் என்ற இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அடுத்த தோனியாக உருவெடுத்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா. அவரைப் போல் மிகவும் அமைதியாக இருந்துகொண்டு பேட்டிங்கும் சிறப்பாக செய்கிறார் என்ற இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் அப்படியே தோனியை நினைவுபடுத்துவதாகவே அமைந்திருந்தது. ஆட்டத்தின் 14வது ஓவரிலேயே களமிறங்கினாலும், ஜடேஜாவுடன் பார்னர்ஷிப் அமைத்து மெல்ல மெல்ல ரன்களை சேர்த்து பின்னர் 19வது ஓவரில் அதிரடி காட்டி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கடைசி ஓவரில் 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது ஒரு டாட் பால் ஆன நிலையில், மிகவும் கூலாக நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர் தலையாட்டியவாறு வெளிப்படுத்திய செய்கை வைரலானது.

<p>கடைசி ஓவரில் டாட் பால் ஆனபோது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியா பாண்ட்யா</p>

சொன்னது போல் தோனி ஸ்டைலில் சிக்ஸர் விளாசி ஆட்டத்தையும் முடித்தார். முதலில் பெளலிங்கில் 3 விக்கெட் பின்னர் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் அமைதியாக தட்டி சென்றார்.

அவரது ஆட்டத்தை ரசிகர்கள் மட்டுமின்று, பல்வேறு முன்னணி வீரர்களும் புகழ்ந்து தள்ளினர். சமீப காலமாக தனது ஆட்டத்தை மெருகேற்றி வரும் பாண்ட்யா முக்கியமான ஆட்டங்களில் பொறுப்புடன் விளையாடி வருகிறார். காயத்திலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்துள்ள அவர் பெளலிங், பேட்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த ஆல்ரவுண்டராகவே ஜொலிக்கிறார்.

இதற்கு, தோனி இஸ் சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்பது போல் தனது சிறப்பான ஆட்டத்திறனுக்கு தோனியிடம் கற்ற விஷயங்களை செயல்படுத்துவது முக்கிய காரணமாக உள்ளதாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் பாண்ட்யா.

இதைத்தொடர்ந்து தோனியின் ஆட்டத்துடன் ஹர்திக் பாண்ட்யாவை ஒப்பிட்டுள்ளார் இந்திய முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்க வேண்டும். அவர்தான் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என நம்புகிறேன். தோனி போன்ற வீரராக பாண்ட்யா மாறிவிட்டார். அவரைப் போல் மிக அமைதியாகவும் இருப்பதோடு, நன்றாகவும் பேட் செய்கிறார்.

பாண்ட்யா காயத்திலிருந்து மீண்டு மிகவும் கடினமாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார். எனவே அவர் இந்திய அணியின் கேப்டன் ஆக வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதும், ஐபிஎல் போட்டியின்போதும் அவர் தனது தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளையும், திறன்களையும் அவர் பெற்றிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அணியின் முக்கியத்துவமான வீரராக மாறியுள்ள பாண்ட்யாவுக்கு ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது.

அடுத்த செய்தி