தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Carlo Ancelotti: கால்பந்து கோப்பைகளின் ராஜா - டான் கார்லோ என அழைக்கப்படும் சாதனை மன்னன் கார்லோ அன்செலாட்டி

HBD Carlo Ancelotti: கால்பந்து கோப்பைகளின் ராஜா - டான் கார்லோ என அழைக்கப்படும் சாதனை மன்னன் கார்லோ அன்செலாட்டி

Jun 10, 2023, 07:00 AM IST

google News
கால்பந்து விளையாட்டில் அதிக கிளப் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற மேனேஜராக இத்தாலி முன்னாள் கால்பந்து வீரர் கார்லோ அன்செலாட்டி உள்ளார். கால்பந்து விளையாடியபோது சாதித்ததை காட்டிலும் கால்பந்து அணி மேனேஜராக இவர் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.
கால்பந்து விளையாட்டில் அதிக கிளப் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற மேனேஜராக இத்தாலி முன்னாள் கால்பந்து வீரர் கார்லோ அன்செலாட்டி உள்ளார். கால்பந்து விளையாடியபோது சாதித்ததை காட்டிலும் கால்பந்து அணி மேனேஜராக இவர் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.

கால்பந்து விளையாட்டில் அதிக கிளப் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற மேனேஜராக இத்தாலி முன்னாள் கால்பந்து வீரர் கார்லோ அன்செலாட்டி உள்ளார். கால்பந்து விளையாடியபோது சாதித்ததை காட்டிலும் கால்பந்து அணி மேனேஜராக இவர் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.

கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை களத்தில் விளையாடும் 11 வீரர்களும் முக்கியமானவர்களே. இவர்கள் அனைவரையும் போட்டி நிகழும் 90 நிமிடமும் ஒருங்கிணைக்கும் ஒற்றை புள்ளியாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அல்லது மேனேஜர் இருப்பார். அவர்தான் வெளியில் இருந்தவாறு ஆட்டத்தின் Startergyஐ அவ்வப்போது வீரர்களிடம் வெளிப்படுத்துவதுடன், உடனடி திட்டங்கள், ஆலோசனைகள் என நொடி பொழுதில் வீரர்களிடம் கடத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்களாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இத்தாலி கால்பந்து அணியின் முன்னாள் வீரராகவும், தற்போது அதிக வெற்றிகளை குவித்து கால்பந்து உலகின் வெற்றிகரமான மேனேஜராகவும் இருந்து வருபவர் கார்லோ அன்செலாட்டி. டான் கார்லோ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் இத்தாலி கால்பந்து கிளப் அணியில் தனது கேரியரை தொடங்கினார். இதன் பின்னர் இவர் விளையாடிய ரோமா, மிலன் போன் கிளப் அணிகள் சாம்பியன் டைட்டில்கள் வென்றன. இவர் விளையாடிய அணிகள் பெற்ற தொடர் வெற்றியின் காரணமாக ராசியான வீரராகவே பார்க்கப்பட்டார்.

இத்தாலி அணிக்காக 26 போட்டிகளில் விளையாடிய கார்லோ, இரண்டு முறை உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். 1990 உலகக் கோப்பை இவர் விளையாடியபோது இத்தாலி அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அதேபோல் 1988இல் நடைபெற்ற யுஇஎஃப்ஏ யுரோ கால்பந்து கோப்பை தொடரிலும் இத்தாலி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

1981 முதல் 1991 வரை 10 ஆண்டுகள் இத்தாலி அணிக்காக விளையாடிய கார்லோ ஓய்வு பெற்றார். இதன்பின்னர் ரெஜியானா, பர்மா, ஜுவென்டஸ் போன்ற கால்பந்து கிளப் அணிகளின் மேனேஜராக 1995 முதல் 2001 வரை செயல்பட்டார்.

இதைத்தொடர்ந்து உலக புகழ் பெற்ற ஏசி மிலன் அணியின் மேனஜராக நியமிக்கப்பட்ட பின் 2002-02 சாம்பியன்ஸ் லிக், 2002-03 கோப்பா இத்தாலியா கோப்பைகளை தனது அணி வெல்ல காரணமாக இருந்தார். மிலன் அணிக்காக மேனேஜராக இருந்தபோது சிரியா ஏ கால்பந்து தொடரில் சிறந்த பயிற்சியாளர் என்ற விருதை இரண்டு முறை பெற்றார்.

2009ஆம் மிலன் அணியிலிருந்து விலகி மற்றொரு புகழ்பெற்ற கிளப் அணியான செல்சியா அணி மேனேஜர் ஆனார். அங்கும் வெற்றி வேட்டையை தொடர்ந்தார். பிரீமியர் கோப்பை, எஃப்ஏ கோப்பை, லீக் 1 தொடர்களை வென்றெடுத்தார். பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு தாவினார். அந்த அணிக்காகவும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்று கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து விலகி பேயெர்ன் முனிச், நாபோல், எவர்டான் போன்ற அணிகளில் பணியாற்றி, 2021இல் மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்கு திரும்பினார். தற்போது ரியல் மாட்ரிட் அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

கால்பந்து வரலாற்றில் ஒரு வீரராக சாதித்ததை விட, அணியின் மேனேஜராக பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக கார்லோ அன்செலாட்டி உள்ளார். நான்கு முறை யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்றவராகவும், ஐரோப்பாவில் நடைபெறும் ஐந்து முக்கிய கால்பந்து லீக் கோப்பைகளை வென்ற ஒரே மேனேஜராகவும் இருந்து வரும் கார்லோ அன்செலாட்டி இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி