தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  காமன்வெல்த் போட்டிகளில் பேட்மிண்டன் நீக்கம்..மோசமான முடிவு, இந்தியா முன்னேற்றத்தை தடுக்கும் செயல் என விமர்சனம்

காமன்வெல்த் போட்டிகளில் பேட்மிண்டன் நீக்கம்..மோசமான முடிவு, இந்தியா முன்னேற்றத்தை தடுக்கும் செயல் என விமர்சனம்

Oct 26, 2024, 06:49 PM IST

google News
மோசமான முடிவு, விளையாட்டில் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் செயல் என 2026 காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டு நீக்கம் குறித்து முன்னாள் வீரர் கோபிசந்த், இளம் வீரர் சிராக் ஷெட்டி போன்றோர் விமர்சித்துள்ளனர். (AFP)
மோசமான முடிவு, விளையாட்டில் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் செயல் என 2026 காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டு நீக்கம் குறித்து முன்னாள் வீரர் கோபிசந்த், இளம் வீரர் சிராக் ஷெட்டி போன்றோர் விமர்சித்துள்ளனர்.

மோசமான முடிவு, விளையாட்டில் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் செயல் என 2026 காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டு நீக்கம் குறித்து முன்னாள் வீரர் கோபிசந்த், இளம் வீரர் சிராக் ஷெட்டி போன்றோர் விமர்சித்துள்ளனர்.

2026ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இருந்து கிரிக்கெட், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்யுள்ளன.

இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் செயல்

இதுதொடர்பாக 1998இல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றவரும், தற்போது இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருக்கும் கோபிசந்த கூறியதாவது, "2026ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து பேட்மிண்டன் விளையாட்டு நீக்கம் செய்யப்பட்டிருக்கும் முடிவு திகைப்படைய செய்துள்ளது. மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த முடிவு விளையாட்டில் இந்தியா போன்ற நாடுகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் உள்ளது.

பேட்மிண்டன் மூலம் இந்தியாவுக்கு மகத்தான வெற்றியும், பெருமையும் கிடைத்துள்ளது. சர்வதேச அரங்கில் நமது பிரகாசமான திறமைகளை பிரகாசிக்க ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது.

இந்த முடிவு இந்திய பேட்மிண்டனுக்கு மட்டுமல்ல, உலகளாவிய விளையாட்டுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவைக் குறிக்கிறது, தெளிவான பகுத்தறிவு இல்லாதது மற்றும் அதன் வளர்ச்சியை பாதிக்கிறது. பேட்மிண்டன் தொடர்ந்து செழித்து வருவதையும், வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமளிப்பதையும் உறுதிசெய்ய, நாம் குரல் எழுப்புவதும், இந்தப் பிரச்சினையை உரிய அதிகாரிகளிடம் கொண்டு வருவதும் மிக முக்கியம்." என்றார்

மோசமான முடிவு

இந்த முடிவு குறித்து இந்தியாவின் இளம் வீரரான சிராக் ஷெட்டி கூறியதாவது, "உண்மையைச் சொல்வதானால், இது மிகவும் மோசமான முடிவு என்று நான் நினைக்கிறேன். பேட்மிண்டனைப் பற்றி என்னால் சொல்ல முடியும், இது மிகவும் பார்க்கப்பட்ட விளையாட்டு என்று நான் நினைக்கிறேன். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்,” என்று சிராக் கூறினார்.

சிராக் ஷெட்டி, ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டிகளில் தனது பார்டனர் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டியுடன் இணைந்து பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தியா சிறப்பாக செயல்படும் அனைத்து போட்டிகளும் நீக்கம்

தொடர்ந்து சிராக், "நான் கோல்ட் கோஸ்ட் மற்றும் பர்மிங்காம் ஆகிய நகரங்களில் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் விளையாடியுள்ளேன். காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முடிவை மாற்றுவார்கள் என நம்புகிறேன். ஏனென்றால், தற்போது பேட்மிண்டன் சமூகத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்.

நாங்கள் எங்கள் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தோம். தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளும் அரசாங்கமும் காமன்வெல்த் விளையாட்டு இன் உயர்மட்ட குழுவும் இதை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்

பேட்மிண்டனுக்கு மட்டுமல்ல, ஹாக்கி, மல்யுத்தம் கூட, இந்தியா சிறப்பாகச் செயல்படும் அனைத்து விளையாட்டுகளும் அகற்றப்படுகின்றன என்று நினைக்கிறேன். அதற்காக நாம் போராடுவது முக்கியம் என்று நினைக்கிறேன்" என்றார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை