Hockey: திருப்புமுனை ஏற்படுத்திய ஒற்றை கோல்! ஜெர்மனியிடம் வீழ்ந்த இந்தியா - ஒலிம்பிக் தகுதிக்கு இன்னொரு வாய்ப்பு
Jan 19, 2024, 11:11 AM IST
மகளிர் ஹாக்கி ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி டிராவில் முடிந்த நிலையில் பெனால்டி முறையில் ஜெர்மனிக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியது.
ஒலிம்பிக் போட்டிகளில் 1984ஆம் ஆண்டு முதல் தவறாமல் தகுதி பெற்று வருகிறது இந்திய மகளிர் ஹாக்கி அணி. இதையடுத்து இந்த ஆண்டில் பாரிஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவதற்கான எஃப்எச் மகளிர் ஒலிம்பிக் குவாலிபயர் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில், இந்தியா - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில், முழு ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்த நிலையில் போட்டியானது 2-2 என சமநிலை அடைந்தது.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக பெனால்டி முறை பின்பற்றப்பட்டது. இதில் 4-3 என்ற கணக்கில் வென்ற ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுடன் இணைந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
இதற்கிடையே ஜெர்மனிக்கு எதிராக தோல்வியடைந்தாலும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா. இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற்றால் தான் பாரிஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா தகுதி பெறும்.
முன்னதாக, இந்தியா - ஜெர்மனி இடையிலான ஆட்டத்தில், இந்திய வீராங்கனை தீபிகா தாக்கூர் அணிக்கு கிடைத்த முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி முதல் கோல் பெற்று தந்தார்.
இதன்பின்னர் ஜெர்மனி வீராங்கனைகள் இரண்டு மற்றும் நான்காவது பாதி நேரத்தில் கோல் அடிக்க 1-2 என இந்தியா பின் தங்கியது. போட்டி முடிவதற்கு 90 விநாடிகளுக்கும் குறைவாக இருக்க, அப்போது இந்திய வீராங்கனை இஷிகா கோல் அடிக்க போட்டி சமநிலை பெற்றது. இருப்பினும் பெனால்டி சூட்அவுட் முறையில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்