HBD Thomas Muller: 33 கோப்பைகளை வென்ற வீரர் - ஜெர்மனி உலகக் கோப்பை வெல்ல காரணமான முக்கியமானவர்
Sep 13, 2023, 06:10 AM IST
ஜெர்மனி நாட்டை சேர்ந்த சிறந்த கால்பந்து வீரராகவும், 33 கோப்பைகளை வென்ற ஒரே ஜெர்மன் வீரர் என்ற பெருமையை தன் வசம் வைத்திருப்பவர் தாமஸ் முல்லர்.
கால்பந்து விளையாட்டை பார்த்து ரசிப்பவர்களுக்கு தாமஸ் முல்லர் என்ற இந்த பெயர் மிகவும் பிரிட்சயம். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது தேசிய அணிக்காக மட்டுமில்லாமல், கால்பந்து லீக் தொடர்களிலும் இவர் வெளிப்படுத்தும் ஆட்டதிறன் முக்கிய பங்கு வகிப்பது. கால்பந்து விளையாட்டில் அட்டாக்கிங் மிட்பீல்டராகவும், பார்வேர்டு வீரராக இருப்பவர் தாமஸ் முல்லர்.
மேற்கூறிய இரண்டு நிலைகளில் மட்டுமில்லாம் ஆட்டத்தின் சூழ்நிலை, எதிரணிக்கு ஏற்ப இரண்டாவது ஸ்டிரைக்கர், செண்ட்ரல் பார்வேர்டு, இரு புறம் இருக்கும் விங் பகுதிகளிலும் விளையாடும் திறன் படைத்த வீரராக இருந்து வருகிறார். சிறந்த அணி வீரர் என்ற பெயரை பெற்றிருக்கும் இவர் கோல் அடிப்பதிலும், கோல் அடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதிலும் சிறப்பாக செயல்படக்கூடியவராக இருந்துள்ளார்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பேயயெர்ன் முனிச் கால்பந்து கிளப்பில் மட்டுமே தனது முழு கால்பந்து கேரியரை தொடர்ந்து வரும் முல்லர் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை, ஃபிபா கிளப் உலகக் கோப்பை என மொத்தம் 33 கோப்பைகளை வென்றுள்ளார்.
2010 முதல் தேசிய அணியான ஜெர்மனியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். 2010 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்று 5 கோல்களை அடித்தார். அந்த தொடரில் ஜெர்மனி 3வது இடத்தை பிடித்தது. ஆனால் தொடர்ந்து சிறந்த இளம் வீரர் என்ற விருதையும், தொடரில் அதிக கோல்கள் அடித்ததற்காக கோல்டன் பூட் விருதையும் வென்றார்.
இதைத்தொடர்ந்து 2014ஆம் உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த முல்லர், அதிக கோல்கள் அடித்தவர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சில்வர் பூட் வென்றார்.
உலகக் கோப்பை ஆல் ஸ்டார் லெவன் அணியில் இடம்பிடித்த முல்லர், தற்போது வரை ஜெர்மனி அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
கடந்த 2022இல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணியில் இடம்பிடித்த முல்லர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெர்மனி அணி குரூப் பிரிவில் இருந்தே வெளியேறியது.
ஜெர்மனி அணிக்காக இதுவரை 122 போட்டிகளில் களமிறங்கி 44 கோல்கள் அடித்துள்ளார். கடைசியாக இவர் 2022இல் இத்தாலிக்கு எதிரான போட்டியில் தனது 44வது கோல் அடித்தார். ஜெர்மனி கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தாமஸ் முல்லர் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்