French Open badminton 2024: பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்! பிரனாய் தோல்வி
Mar 07, 2024, 02:55 PM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து, கனடாவை சேர்ந்த மிச்செல் லி என்பவரை எதிர்கொண்டார்.
சுமார் 80 நிமிடம் வரை நீடித்த இந்த போட்டியில் பிவி சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் மிச்செல் லியை போராடி வென்றார்.
மூட்டு வலி காயத்தால் நான்கு மாதங்களாக பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்காத பிவி சிந்து, கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அணிகள் சாம்பியஷிப் தொடரில் கம்பேக் கொடுத்தார்.
அதேபோல், மிச்செல் லியும் காயத்தால் அவதிப்பட்டு ஓய்வுக்கு பின்னர் இந்த போட்டியில் களமிறங்கினார். முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவிய சிந்து, அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றியை பெற்றார்.
இந்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த போட்டியில் உலகின் நம்பர் 10 வீராங்கனையும் அமெரிக்காவை சேர்ந்தவருமான பீவென் ஜாங் என்பவரை எதிர்கொள்கிறார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனா தைபேவின் செளவ் டியான் சென் என்பவரை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 21-15, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். சுமார் 66 நிமிடங்கள் வரை இந்த போட்டி நீடித்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்