HBD Zinedine Zidane: 6 முறை சிறந்த வீரர் விருது - உலகக் கோப்பை, ஐரோப்ப சாம்பியன்ஷிப் வென்ற ஒரே வீரர்
Jun 23, 2023, 07:00 AM IST
கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பை மற்றும் ஐரோப்பா சாம்பியன்ஷிப் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வீரரும், தற்போது மேனஜராக கால்பந்து கிளப் அணிகளுக்கு செயல்பட்டு வரும் ஜினடின் ஜிதேன் உள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரரான ஜினடின் ஜிதேன் பிரான்ஸ் தேசிய அணியின் சிறந்த மிட் பீல்ட் வீரராக இருந்துள்ளார். தற்போது பல்வேறு உள்ளூர் கிளப் அணியின் மேனஜேராக இருந்து வருவதுடன், உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிபா விருதை 1998, 2000, 2003 ஆகிய ஆண்டுகளில் வென்றிருக்கும் ஜிதேன், பிரான்ஸ் நாட்டில் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருதையும் வென்றுள்ளார்.
கேனஸ் கால்பந்து அணியில் முதல் முறையாக விளையாடி ஜிதேன், ஆரம்பகாலகட்டத்தில் பிரான்ஸ் கால்ப்ந்து லீக் தொடரான லிகு 1 தொடரில் தனது பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் இத்தாலி லீக்கான சிரியா ஏ தொடரில் புகழ்பெற்ற ஜுவென்டஸ் அணியில் விளையாடினார். ரியல் மாட்ரிட் அணிக்காக மிக பெரிய தொகையில் ஒப்பந்தமான ஜிதேன், லா லிகா, UEFA சாம்பியன்ஸ் லீக் போன்ற முக்கிய கால்பந்து தொடர்களில் விளையாடியுள்ளார்.
பிரான்ஸ் அணிக்காக 108 போட்டிகளில் விளையாடிய ஜிதேன், 1998ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் முக்கிய வீரராக ஜொலித்தார். UEFA Euro 2000 தொடர் நாயகன், 2006 உலகக் கோப்பையில் கோல்டன் பந்து, சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் போன்ற பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
கால்பந்து போட்டிகளில் இருந்து 2015இல் ஓய்வு பெற்ற பிறகு ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மேட்ரிட் கால்டில்லா அணிக்கு பயிற்சியாளரானார். அந்த அணி UEFA Super Cup, FIFA Club World Cup இரண்டு முறை வெல்வதற்கு காரணமாக அமைந்தார்.
அணியில் ஜிதேன் மிட்ல் பீல்ட் பொஷிசஷின் விளையாடுவார். இவரது ஆட்டமானது எதிரணி வீரரை அட்டாக் செய்து முன்னேறுவது அல்லது பிளாக் செய்வதாகும். அதை திறன்பட செய்து அணிக்கு முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது அட்டாக்கிங் ஆட்டத்தால் உலகக் கோப்பை தொடரில் 2 முறை ரெட் கார்டு வாங்கிய ஒரே வீரராக இருந்துள்ளார்.
அதேபோல் உலகக் கோப்பை மற்றும் ஐரோப்பா சாம்பியன்ஷிப் வென்ற ஒரே வீரராகவும், ஆறு முறை உலகின் சிறந்த வீரர் என்ற ஃபிபா விருதையும் வென்றவராக இருந்து வரும் ஜிதேன் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்