தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Formula 4 Race Postponed: ஃபார்முலா 4 பந்தயத்தை ஒத்திவைத்தது தமிழ்நாடு அரசு

Formula 4 Race postponed: ஃபார்முலா 4 பந்தயத்தை ஒத்திவைத்தது தமிழ்நாடு அரசு

Manigandan K T HT Tamil

Dec 05, 2023, 04:04 PM IST

google News
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழ்நாடு அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்க தொடங்கின. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது.

பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு பகுதிகளிலும் மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மின் விநியோகமும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தபட்சம் எட்டு பேர் உயிரிழந்ததுடன், ஹூண்டாய் மோட்டார் கோ. தொழிற்சாலை உட்பட சில ஆலைகளும் மூடப்பட்டது. தமிழகத்தில் மழைக் பொழிவை ஏற்படுத்திய மிக்ஜாம் சூறாவளி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் உள்ள பாபட்லா அருகே செவ்வாயன்று தொடங்கியது.

இந்தப் புயல் ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா அருகே கரையைக் கடக்கும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்பு ட்விட்டர் என அழைக்கப்படும் எக்ஸ் சமூக வலைதளமான கிரேட்டர் சென்னை காவல்துறையின் பதிவின்படி சென்னையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி